இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி M12 அறிமுகமாகப்போவது இந்த தேதியில் தான்!

1 March 2021, 12:52 pm
Samsung Galaxy M12 launching in India on March 11
Quick Share

சாம்சங் இந்த மாதத்தில் கேலக்ஸி M12 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. சாம்சங் கேலக்ஸி M12 இப்போது மார்ச் 11 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நினைவுகூர, இந்த தொலைபேசி முதன்முதலில் வியட்நாமில் கடந்த மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

சாம்சங் கேலக்ஸி M12 அமேசான் இந்தியா வழியாக வாங்குவதற்கு கிடைக்கும். அமேசான் பட்டியலின் மூலம் வெளியான தகவலின்படி, கேலக்ஸி M12 மிகப்பெரிய 6,000 mAh பேட்டரியுடன் வரும். இது 90 Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.5 அங்குல டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் 48 MP உடன் நான்கு கேமரா அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

சமீபத்திய அறிக்கையின்படி, வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி M12 தொலைபேசி ரூ.12,000 விலையில் கிடைக்கும். தொலைபேசி கருப்பு, நீலம் மற்றும் எமரால்டு பச்சை வண்ணங்களில் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி M12 விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி M12 6.5 இன்ச் HD+ இன்ஃபினிட்டி-V டிஸ்ப்ளே 1600 x 720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன், 20: 9 திரை விகிதம் மற்றும் 90 Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனருடன் வருகிறது.

இந்த தொலைபேசி 2GHz ஆக்டா கோர் செயலி உடன் இயக்கப்படுகிறது, இது எக்ஸினோஸ் 850 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி M12 3 ஜிபி / 4 ஜிபி / 6 ஜிபி ரேம் 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் மூன்று மாடல்களில் வருகிறது. இன்டெர்னல் ஸ்டோரேஜை மைக்ரோ SD வழியாக 1TB வரை விரிவாக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி M12 ஆனது 6000 எம்ஏஎச் பேட்டரி உடன் 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. தொலைபேசி ஆண்ட்ராய்டு 11 OS உடன் இயங்குகிறது, அதன் மேல் ஒன்யூஐ 3.0 இயங்குகிறது.

இணைப்பு விருப்பங்களில் இரட்டை சிம், புளூடூத் 5.0, வைஃபை, ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி டைப்-C மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் 164.0 மிமீ x 75.9 மிமீ x 9.7 மிமீ அளவுகளையும் மற்றும் 221 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

Views: - 4

0

0