டைமென்சிட்டி 720, 48 MPகுவாட் கேமராவுடன் Samsung Galaxy M32 5ஜி போன் இந்தியாவில் அறிமுகம் | விலை & விவரங்கள்

Author: Hemalatha Ramkumar
25 August 2021, 3:17 pm
Samsung Galaxy M32 5G with Dimensity 720, 48MP Quad Cameras Launched in India
Quick Share

கேலக்ஸி M32 இன் 4ஜி மாடல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் ஆனதை அடுத்து, சாம்சங் இன்று கேலக்ஸி M32 5ஜி போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

இந்த சாதனம் அதன் 4ஜி மாடலுடன் ஒப்பிடும்போது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுள்ளது. 

இதில் டைமென்சிட்டி சிப்செட் மற்றும் 5ஜி இணைப்பு போன்ற வசதிகளுக்கான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கேலக்ஸி M32 5ஜி போனின் விவரக்குறிப்புகள், விலை மற்றும் விற்பனை விரவங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கேலக்சி M32 அம்சங்கள்

 • கேலக்ஸி M32 5ஜி 6.5 இன்ச் HD+ இன்ஃபினிட்டி-V டிஸ்ப்ளேவை 60 Hz புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டுள்ளது. 
 • இது 1600 x 720p ரெசல்யூஷன் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது. முன்புறத்தில் V வடிவ 13 MP செல்ஃபி ஸ்னாப்பர் இடம்பெறுகிறது.
 • பின்புறத்தில், சாதனம் குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் முதன்மையாக 48MP லென்ஸ், 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார், போர்ட்ரைட் ஷாட்களுக்கான 5MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவை உள்ளது.
 • கேலக்ஸி M32 5 ஜி மீடியாடெக் டைமென்சிட்டி 720 செயலியை பேக் செய்கிறது, இது 5 ஜி ஆதரவு கொண்ட சிப்செட் ஆகும். 
 • இது 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்டெர்னல் ஸ்டோரேஜை 1TB க்கு மேலும் நீட்டிக்க MicroSD ஸ்லாட்டு உள்ளது.
 • கேலக்ஸி M32 க்குள் 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியும் உள்ளது. 
 • மேலும், இந்த சாதனம் சாம்சங்கின் நாக்ஸ் செக்யூரிட்டி அமைப்புக்கான ஆதரவுடன் வருகிறது. 
 • மென்பொருள் முன்னணியில், சாதனம் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒன் UI 3.1 உடன் இயங்குகிறது. 
 • மேலும், இரண்டு வருட முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்களைப் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 • இது தவிர, கேலக்ஸி M32 5ஜி போன் 5ஜி நெட்வொர்க்குகளுக்கான ஆதரவுடன் வருகிறது. 
 • மேம்படுத்தப்பட்ட 5 ஜி இணைப்பிற்காக இது N1 (2100), N3 (1800), N5 (850) மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 12 5G பேண்டுகளுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்

இதன் விலையைப் பொறுத்தவரையில், ​​கேலக்ஸி M32 5ஜி 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி ஆகிய இரண்டு உள்ளமைவுகளில் வருகிறது. 

6 ஜிபி + 128 ஜிபி அடிப்படை மாடல் ரூ.20,999 விலையில் கிடைக்கும் மற்றும் சாம்சங் உயர்நிலை மாடலின் விலையை வெளியிடவில்லை. 

நீங்கள் அடிப்படை மாடலை ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு உடன் வாங்கினால் உடனடி ரூ. 2,000 தள்ளுபடி கிடைக்கும் என்பதால் ரூ. 18,999 க்கு வாங்கலாம்.

இந்த சாதனம் அமேசான் இந்தியா மற்றும் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரிலிருந்து செப்டம்பர் 2 முதல் வாங்க கிடைக்கும்.

Views: - 334

0

0