Samsung Galaxy M32 | ரூ.15000 விலையில் 6000 mAh பேட்டரி உடன் ஒரு நல்ல போன் அறிமுகமாகியிருக்கு!

21 June 2021, 3:42 pm
Samsung Galaxy M32 launched in India
Quick Share

சாம்சங் இன்று இந்தியாவில் பட்ஜெட் விலையிலான இடைப்பட்ட ‘M’ தொடரில் சாம்சங் கேலக்ஸி M32 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய தொலைபேசி 6.4 அங்குல FHD+ 90Hz AMOLED டிஸ்ப்ளே, ஹீலியோ G80, 6000 mAh பேட்டரி, குவாட் ரியர் கேமராக்கள் மற்றும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முழுமையான விவரக்குறிப்புகள் மற்றும் விலை விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி M32 ஸ்மார்ட்போன், சாம்சங் கேலக்ஸி M02, சாம்சங் கேலக்ஸி M12 மற்றும் சாம்சங் கேலக்ஸி M42 5ஜி ஆகியவற்றுக்குப் பிறகு இந்த ஆண்டில் சாம்சங்கின் ஐந்தாவது கேலக்ஸி M சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும்.

சாம்சங் கேலக்ஸி M32 போனின் 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கான விலை ரூ.14,999 ஆகவும், 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.16,999 ஆகவும் நிர்ணயம் செய்யபட்டுள்ளது. இது அமேசான், சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பிற சில்லறை சேனல்கள் வழியாகவும் வாங்க கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி M32 கருப்பு மற்றும் நீல வண்ண விருப்பங்களில் கிடைக்கும். அறிமுக சலுகையாக, ஐசிஐசிஐ கார்டுகளுடன் செலுத்தும் போது  நுகர்வோர்கள் ரூ.1250 மதிப்புள்ள உடனடி கேஷ்பேக்கைப் பெறலாம். கேஷ்பேக்கிற்கு பிறகு 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ.13749 விலையிலும், 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ.15749 விலையிலும் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி M32 விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி M32 6.4 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி-U டிஸ்ப்ளே 90 Hz புதுப்பிப்பு வீதத்துடன் மற்றும் 800 நைட்ஸ் உயர் பிரகாச பயன்முறையுடன் வருகிறது. இந்த சாதனம் மீடியாடெக்கின் ஹீலியோ G80 சிப்செட் உடன் 4/6 ஜிபி RAM மற்றும் 64/128 ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இது மைக்ரோ SD வழியாக விரிவாக்கக்கூடியதாக இருக்கும்.

கேமராவைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி M32 ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 64 மெகாபிக்சல் முதன்மை சாம்சங் ISOCELL GW3 சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் ஆழம் மற்றும் மேக்ரோ சென்சார்கள் ஆகியவை இருக்கும். தொலைபேசியில் செல்பி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 20 மெகாபிக்சல் முன் கேமரா இருக்கும்.

தொலைபேசி 6000 mAh பேட்டரியை 15W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் கொண்டிருக்கும். தொலைபேசி 130 மணிநேர மியூசிக் பிளேபேக், 40 மணிநேர டாக்டைம் மற்றும் 25 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது. சாம்சங் கேலக்ஸி M32 ஆண்ட்ராய்டு 11 இல் OneUI உடன் இயங்குகிறது. கேலக்ஸி M32 போனுடன் இயர்போன்களைப் பயன்படுத்தும்போது டால்பி அட்மோஸ் ஆதரவை வழங்க சரவுண்ட் சவுண்ட் எஃபெக்ட் உடன் வருகிறது.

தொலைபேசி 160 x 74 x 9 மிமீ அளவுகளையும் மற்றும் 196 கிராம் எடையையும் கொண்டுள்ளது. இணைப்பு அம்சங்களைப் பொறுத்தவரை இது இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5, GPS + GLONASS, USB Type-C மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றை கொண்டுள்ளது.

Views: - 181

0

0