QRNG சிப் உடன் சாம்சங் கேலக்ஸி குவாண்டம் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

14 April 2021, 3:30 pm
Samsung Galaxy Quantum2 with QRNG chip launched
Quick Share

சாம்சங் நிறுவனம் குவாண்டம் கிரிப்டோகிராஃபி தொழில்நுட்பத்துடன் அதன் இரண்டாவது ஸ்மார்ட்போனான கேலக்ஸி குவாண்டம் 2 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கொரியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. 

அதன் முந்தைய பதிப்பான கேலக்ஸி A குவாண்டம் போலவே, இதுவும் சாம்சங்கின் சொந்த சந்தையில் மட்டும் பிரத்தியேகமாக கிடைக்கும். ஆனால் இது மற்ற சந்தைகளில் கேலக்ஸி A82 ஆக அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேலக்ஸி குவாண்டம் 2 இன் சிறப்பம்சம் என்னவென்றால், இது உலகின் மிகச்சிறிய quantum random number generator (QNRG) சிப்செட்டைக் கொண்டுள்ளது. “இந்த QRNG சிப்செட் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்கு கணிக்க முடியாத மற்றும் சீரற்ற வடிவம் இல்லாத எண்களை உருவாக்குவதன் மூலம் பாதுகாப்பு தேவைப்படும் சேவைகளை மிகவும் பாதுகாப்பான முறையில் பயன்படுத்த முடியும்” என்று SK டெலிகாம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கேலக்ஸி குவாண்டம் 2 விவரக்குறிப்புகள்

  • இதன் விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, கேலக்ஸி குவாண்டம் 2 6.7 அங்குல முழு HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவை 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டுள்ளது. 
  • ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ சிப்செட் உடன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 
  • 1TB வரை சேமிப்பக விரிவாக்கத்திற்கு மைக்ரோ SD கார்டு ஸ்லாட் உள்ளது. 
  • இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,500 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
  • கேலக்ஸி குவாண்டம் 2 இல் மூன்று கேமரா அமைப்பு உள்ளது, இதில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா ஆகியவை அடங்கும். 
  • செல்ஃபிக்களுக்கு, கேலக்ஸி குவாண்டம் 2 10 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது. 
  • மென்பொருள் முன்னணியில், கேலக்ஸி குவாண்டம் 2 ஆண்ட்ராய்டு 11-அடிப்படையிலான One UI உடன் இயங்குகிறது.
  • ஸ்மார்ட்போனின் விலை KRW 699,600 (தோராயமாக ரூ.47,200) ஆகும். கேலக்ஸி குவாண்டம் 2 இப்போது முன்கூட்டியே ஆர்டர் செய்ய கிடைக்கிறது, மேலும் இது ஏப்ரல் 23 அன்று கொரியாவில் வாங்குவதற்கு கிடைக்கும்.

Views: - 65

0

0