விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி டேப் A7 | எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்னென்ன?

14 September 2020, 2:57 pm
Samsung Galaxy Tab A7 (2020) launching soon in India
Quick Share

சமீப காலமாக இந்தியாவில் பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் சாம்சங் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. கேலக்ஸி M51 மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 போன்ற ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் வெளியானதைப் பார்த்தோம். இப்போது, சாம்சங் விரைவில் கேலக்ஸி டேப் A7 (2020) சாதனத்தை வெளியிடும் என்று தெரிகிறது.

சாம்சங் கேலக்ஸி டேப் A7 (2020) செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டது. SM-T500 மற்றும் SM-T505 ஆகிய இரண்டு மாடல் பெயர்கள் இப்போது சாம்சங்கின் இந்திய ஆதரவு பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.  அதில் முதலாவது மாடல் வைஃபை – ஒன்லி மாறுபாடு மற்றும் இரண்டாவது எல்டிஇ மாறுபாடு ஆகும்.

வலைத்தள பக்கத்தில் புதிய பட்டியல் விலை அல்லது விவரக்குறிப்புகள் போன்ற சாதனத்தைப் பற்றி வேறு எந்த விவரங்களையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் சாதனத்தின் விவரக்குறிப்புகள் உலகளாவிய மாறுபாட்டிற்கு ஒத்ததாக இருக்கக்கூடும், இது வைஃபை ஒன்லி மாறுபாட்டிற்கு 233 யூரோக்கள் (தோராயமாக ரூ.20,282) விலையும் மற்றும் LTE வேரியண்டிற்கு 282 யூரோக்கள் (தோராயமாக ரூ.24,500) விலையும் கொண்டிருக்கும்.

சாம்சங் கேலக்ஸி டேப் A7 டேப்லெட் 10.4 இன்ச் WUXGA+ டிஸ்ப்ளேவுடன் 2000 x 1200 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் வருகிறது. டேப்லெட் அட்ரினோ 610 GPU உடன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 செயலி உடன் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது, இது மைக்ரோ SD கார்டு ஸ்லாட் வழியாக 1 TB வரை மேலும் விரிவாக்கப்படலாம்.

கேமரா பிரிவில், கேலக்ஸி டேப் A7 LED ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது, முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. டேப்லெட்டில் 7040 mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும், இது ஆண்ட்ராய்டு 10 இயக்க முறைமையில் இயங்குகிறது. இணைப்பைப் பொறுத்தவரை, இது 4 ஜி LTE (ஆபிஷனல்), வைஃபை 802.11 ac (2.4GHz / 5GHz), வைஃபை டைரக்ட், புளூடூத் 5 LE, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி 2.0 டைப்-C மற்றும் ஒற்றை சிம் ஸ்லாட்டை ஆதரிக்கிறது.

இந்த விவரக்குறிப்புகள் உடன், டேப்லெட் ஒரு சிறந்த அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று தோன்றுகிறது, ஆனால் அவை எவ்வளவு போட்டித்தன்மையுடன் விலை நிர்ணயம் செய்கின்றன என்பதைப் பார்க்க  சில நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். மேலும், டேப் A7 (2020) எதிர்காலத்தில் ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட புதிய ஒன்யூஐ 3.0 ஐப் பெறவும் திட்டமிட்டுள்ளது.

Views: - 10

0

0