அறிமுகத்திற்கு முன்னதாக சாம்சங் கேலக்ஸி டேப் A7 சாதனத்தின் விலை கசிந்தது!

29 August 2020, 5:03 pm
Samsung Galaxy Tab A7 price leaked ahead of launch
Quick Share

சாம்சங் சமீபத்தில் தனது முதன்மை கேலக்ஸி டேப் S7 தொடர் டேப்லெட்களை அறிவித்தது. இப்போது சாம்சங் அதன் வரவிருக்கும் கேலக்ஸி டேப் A7 டேப்லெட்டில் வேலை செய்கிறது. டச்சு சில்லறை விற்பனையாளர் ஏற்கனவே கேலக்ஸி டேப் A7 விலையை கசியவிட்டதால் இது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டச்சு சில்லறை விற்பனையாளர் சென்ட்ரல் பாயிண்டின் படி, சாம்சங் கேலக்ஸி டேப் A7 விலை 32 ஜிபி ஸ்டோரேஜ் வைஃபை மட்டுமே கொண்ட மாறுபாட்டிற்கு 235 யூரோக்கள் (தோராயமாக ரூ.20,500), 32 ஜிபி சாம்சங் கேலக்ஸி டேப் A7 எல்டிஇ மாறுபாடுக்கு 293 யூரோக்கள் (சுமார் ரூ. 25,600), சாம்சங் கேலக்ஸி டேப் A7 இன் 64 ஜிபி வைஃபை மற்றும் LTE வகைகள் முறையே 266 யூரோக்கள் (தோராயமாக ரூ.23,200) மற்றும் 323 யூரோக்கள் (தோராயமாக ரூ.28,200) விலையுடன் பட்டியலிடப்பட்டுள்ளன.

சில்லறை விற்பனையாளர் வரவிருக்கும் டேப்லெட்டின் விலைகளை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், சில விவரக்குறிப்புகளையும் கசியவிட்டுள்ளது. கேலக்ஸி டேப் A7 2000 x 1200 பிக்சல்கள் திரைத் தெளிவுத்திறன் கொண்ட 10.4 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். டேப்லெட்டில் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் இயங்கும். இது ஆண்ட்ராய்டு 10 ஐ ஒன் UI உடன் இயக்கும் மற்றும் 7,040 mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

மேலும், ஸ்லேட்டின் பின்புறத்தில் ஒரு கேமரா உள்ளது, இருப்பினும் முந்தைய கூகிள் பிளே கன்சோல் பட்டியல் இரட்டை 13 மெகாபிக்சல் + 5-மெகாபிக்சல் கேமரா இருக்கும் என்று கூறுகிறது. வண்ணங்களைத் தேர்வு செய்ய மூன்று விருப்பங்கள் இருக்கும்: சாம்பல், தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய வண்ணங்களைக் கொண்டிருக்கும்.

மேலும், பட்டியலின்படி, கேலக்ஸி டேப் A7 10.4 செப்டம்பர் 11 ஆம் தேதி நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டேப்லெட் ஜீக்பெஞ்ச் தரப்படுத்தல் வலைத்தளத்திலும் மாதிரி எண் SM-T505 உடன் காணப்பட்டது. பட்டியலின் படி, டேப்லெட்டில் குவால்காம் ஸ்னாப்டிராகன் செயலி ‘பெங்கால்’ என்ற குறியீட்டு பெயரிடப்பட்டுள்ளது, இது ஸ்னாப்டிராகன் 662 ஆக இருக்கலாம். டேப்லெட் 3 ஜிபி ரேம் உடன் வரும், இது ஆண்ட்ராய்டு 10 இல் இயங்கும். 

Views: - 37

0

0