சாம்சங் கேலக்ஸி டேப் A7 வாங்க வேண்டுமென்றால் இந்த தேதியில் தயாராக இருங்க!

26 September 2020, 1:18 pm
Samsung Galaxy Tab A7 to be available for pre-booking from September 28
Quick Share

தென் கொரிய நிறுவனமான சாம்சங் தனது இடைப்பட்ட பிரிவிலான, மலிவு விலை கேலக்ஸி டேப் A7 ஐ அடுத்த வாரம் இந்தியாவில் ரூ.20,000 முதல் ரூ.25,000 விலையில் அறிமுகப்படுத்த உள்ளது.

கேலக்ஸி டேப் A7 க்கான முன்பதிவு செப்டம்பர் 28 ஆம் தேதி தொடங்கும் என்றும் அடுத்த மாதம் தொடக்கத்தில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என்றும் தொழில்துறை வட்டாரங்கள் IANS யிடம் தெரிவித்தன.

சாம்சங் கேலக்ஸி டேப் A7 டேப்லெட் 10.4 இன்ச் WUXGA + டிஸ்ப்ளேவுடன் 2000 x 1200 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் வருகிறது. டேப்லெட் அட்ரினோ 610 GPU உடன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 செயலி உடன் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது, இது மைக்ரோ SD கார்டு ஸ்லாட் வழியாக 1 TB வரை மேலும் விரிவாக்கப்படலாம்.

கேமராவைப் பொறுத்தவரை, கேலக்ஸி டேப் A7 LED ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது, முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் ஷூட்டர் உள்ளது. டேப்லெட் 7040 mAh பேட்டரியுடன் உள்ளது, இது ஆண்ட்ராய்டு 10 OS உடன் இயங்குகிறது. இணைப்பைப் பொறுத்தவரை, இது 4 ஜி LTE (விரும்பினால்), வைஃபை 802.11 ஏசி (2.4GHz / 5GHz), வைஃபை டைரக்ட், புளூடூத் 5 LE, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி 2.0 டைப்-சி மற்றும் ஒற்றை சிம் ஸ்லாட்டை ஆதரிக்கிறது.

சாம்சங் சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி டேப் S7 மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் S7+ சாதனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் S7 வைஃபை ஒன்லி வேரியண்டின் விலை ரூ.55,999 ஆகவும், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட 4 ஜி வேரியண்டின் விலை ரூ.63,999 ஆகவும் உள்ளது. கேலக்ஸி டேப் S7+ 4 ஜி வேரியண்டின் விலை ரூ.79,999 ஆகும்.

Views: - 0 View

0

0