Samsung Galaxy Z Flip 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, விவரக்குறிப்புகள் மற்றும் விற்பனை விவரங்கள்

Author: Hemalatha Ramkumar
12 August 2021, 12:15 pm
Samsung Galaxy Z Flip 3 launched
Quick Share

சாம்சங் இன்று 2021 ஆண்டின் இரண்டாவது முக்கியமான நிகழ்வை நடத்தியது. 2021 ஆண்டின் Galaxy Unpacked நிகழ்வில், கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. 

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி Z ஃப்ளிப் 3 ஸ்மார்ட்போன் ஏற்கனவே இருக்கும் கேலக்ஸி Z ஃபிளிப் மற்றும் கேலக்ஸி Z ஃபிளிப் 5ஜி ஸ்மார்ட்போன்களின் வரிசையில் இணைகிறது. 

Samsung Galaxy Z Flip 3 விலை விவரங்கள்

  • விலையைப் பொருத்தவரை, கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடலுக்கு அமெரிக்காவில் $999.99 அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.74,257 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
  • இது ஆகஸ்ட் 11 முதல் அமெரிக்காவில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கும் மற்றும் ஆகஸ்ட் 27 முதல் அமெரிக்கா, கொரியா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் விற்பனைக்கு வரும். 
  • சாம்சங் தனது கேலக்ஸி Z ஃப்ளிப் 3 ஸ்மார்ட்போனை முன்கூட்டியே ஆர்டர் செய்யும் பயனர்களுக்கு ஒரு வருடம் சாம்சங் கேர்+24 பாதுகாப்பு சேவை ஆதரவையும் வழங்கும்.

Samsung Galaxy Z Flip 3 விவரக்குறிப்புகள்

  • விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி Z ஃப்ளிப் 3 இரண்டு டிஸ்பிளேக்களைக் கொண்டுள்ளது.
  • உட்புறத்தில், இது 6.7 இன்ச் மடிக்கக்கூடிய AMOLED டிஸ்பிளே உடன் 2640×1080 பிக்சல்கள் ரெசல்யூஷன், 120 Hz ஸ்கிரீன் refresh rate மற்றும் 1200 நிட்ஸ் உச்ச பிரகாசம் ஆகியவற்றை வழங்கும். 
  • வெளிப்புறத்தில், உங்களுக்கு 1.9 அங்குல சூப்பர் AMOLED திரை கிடைக்கும். இது 512×260 ரெசல்யூஷன் மற்றும் 935 நிட்ஸ் பிரகாசத்தை வழங்கும். 
  • இந்த சிறிய திரை தேதி மற்றும் நேரம் போன்ற விவரங்களைக் காட்டும்.
  • புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி Z ஃபிளிப் 3 ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் செயலி உடன் இயக்கப்படுகிறது, இதன் அதிகபட்ச வேகம் 2.84 GHz ஆகும். 
  • இந்த செயலி 8 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் ஸ்பேஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 
  • இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான OneUI 3.0 இல் இயங்குகிறது. 
  • கேமராவைப் பொறுத்தவரை, கேலக்ஸி Z ஃப்ளிப் 3 12 MP வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 12 MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 
  • செல்ஃபிக்களை க்ளிக் செய்ய முன்பக்கத்தில் 10 MP கேமரா இருக்கும். 
  • பின்புற கேமரா அமைப்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் உடன் பாதுகாக்கப்படுகிறது மற்றும் இது 10x டிஜிட்டல் ஜூம், HDR10+ ரெக்கார்டிங் மற்றும் ஆட்டோ-ஃபோகஸ் டிராக்கிங் அம்சத்தை வழங்குகிறது.
  • இணைப்பிற்காக, கேலக்ஸி Z ஃப்ளிப் 3 வைஃபை 802.11, ப்ளூடூத் வி 5.1, யூஎஸ்பி டைப்-சி, என்எப்சி, ஜிபிஎஸ், கலிலியோ, GLONASS, Beidou மற்றும் 5ஜி தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. 
  • இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது மற்றும் இது IPX8 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு பூச்சுடன் வருகிறது. 
  • ஆடியோவைப் பொறுத்தவரை, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மடிக்கக்கூடிய டிஸ்பிளே ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்துடன் சரவுண்ட் சவுண்ட் உள்ளது, இதில் டால்பி டிஜிட்டல், டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆகியவை அடங்கும்.
  • கேலக்ஸி Z ஃப்ளிப் 3 ஸ்மார்ட்போனில் 3,300 எம்ஏஎச் பேட்டரி 15W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், 10W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் டெக்னாலஜி மற்றும் 4.5 ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் டெக்னாலஜி ஆதரவு உள்ளது.

Views: - 392

0

0