Samsung Galaxy Z Flip 3 | சாம்சங் கேலக்ஸி Z ஃபிளிப் 3 போனின் முக்கிய விவரங்கள் வெளியானது

20 January 2021, 6:14 pm
Samsung Galaxy Z Flip 3 Specifications, Price tipped
Quick Share

கேலக்ஸி Z ஃபிளிப் 5 ஜி என்பது செங்குத்தாக ஃபிளிப் செய்யக்கூடிய சாதனமாகும், இது வடிவமைப்பின் அடிப்படையில் சாம்சங்கின் முதன்மையான ஸ்மார்ட்போன் ஆகும், இப்போது கொரிய நிறுவனம் இந்த சாதனத்தின் அடுத்த பதிப்பை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளது, அது கேலக்ஸி Z பிளிப் 3 என்று அழைக்கப்படுகிறது.

டிப்ஸ்டர் Anthony கூற்றுப்படி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி Z ஃபிளிப் 3 $1499 (தோராயமாக ரூ.1,09,000) விலை உடன் வரும், இது அதன் முன்னோடிகளை விட $50 அதிக விலை கொண்டதாக இருக்கும். ஸ்மார்ட்போனின் சில முக்கிய விவரக்குறிப்புகளையும் டிப்ஸ்டர் தெரிவித்துள்ளார்.

Samsung Galaxy Z Flip 3 Specifications, Price tipped

கேலக்ஸி Z ஃபிளிப் 3 120 Hz டைனமிக் AMOLED டிஸ்ப்ளேவுடன் வரக்கூடும், இது 6.7 – 6.9-இன்ச் வரை அளவைக் கொண்டிருக்கக்கூடும். டிப்ஸ்டரின் தகவலின்படி, கேலக்ஸி ஃபோல்டு 2 இல் மூன்று 12 MP ஷூட்டர்கள் உட்பட மூன்று கேமரா அமைப்பை இது கொண்டிருக்கக்கூடும்.

கேலக்ஸி Z ஃபிளிப் ஸ்னாப்டிராகன் 865+ சிப்செட் உடன் இயக்கப்பட்டது என்பதைக் கருத்தில் கொண்டு, Z பிளிப் 3 ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் கொண்டிருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கசிவைப் பொறுத்தவரை, இது நீர் மற்றும் தூசி எதிர்ப்பு திறனுடன் இருக்கும், இந்த அம்சம் கேலக்சி Z ஃபிளிப் போனில் இல்லாமல் இருந்தது.

கசிந்த கூடுதல் அம்சங்களின் அடிப்படையில் இது மெல்லிய பெசல்கள், சிறிய பஞ்ச் ஹோல் கட்அவுட் மற்றும் புதிய ஹின்ஜ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 

LetsGoDigital இன் சமீபத்திய அறிக்கை Z பிளிப் 3 இன் கருத்துப் படத்தையும் சித்தரித்து வழங்கியுள்ளது, இது புதிய கேலக்ஸி S21 தொடருக்கு ஒத்த கேமரா வரிசையையும் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.

Views: - 0

0

0