சீனாவிற்கு கும்பிடு போட்டுவிட்டு…. மூட்டையைக் கட்டும் சாம்சங்!

7 September 2020, 4:56 pm
Samsung to Shut Down its TV Manufacturing Plant in China
Quick Share

சாம்சங் நிறுவனம் சீனாவில் உள்ள தனது கடைசி ஸ்மார்ட்போன் உற்பத்தி தொழிற்சாலையை மூடியது. மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங்  சீனாவில் உள்ள அதன் தொலைக்காட்சி தயாரிப்பு ஆலையையும் விரைவில் மூடப்போவதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.

SamMobiles புதிய அறிக்கையின்படி, சாம்சங் நிறுவனம் சீனாவின் தியான்ஜினில் உள்ள தனது ஒரே தொலைக்காட்சி உற்பத்தி ஆலையையும் விரைவில் மூடிவிடும்.

இந்த முடிவு கடந்த 2018 ஆண்டில் எடுக்கப்பட்டது என்றும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தொழிற்சாலையில் சுமார் 300 தொழிலாளர்கள் உள்ளனர், இது 2020 நவம்பர் இறுதிக்குள் மூடப்படும். மேலும், QD-OLED நுடபத்தை QLED TV களுக்கு வழங்குவதன் மூலம் டிஸ்பிளே பேனல்களில் பெரிய மாற்றத்தைப் பெற நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாது, எல்சிடி பேனல்கள் உடனான டிவிகளின் உற்பத்தியை நிறுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எல்ஜியின் OLED தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும்போது, ​​சாம்சங் QD -OLED பேனல்கள் இதேபோல் செயல்படுகின்றன. QD-OLED பேனல்களைப் பயன்படுத்தி உருவாகும் ‘அடுத்த தலைமுறை’ டி.வி.களுக்கு சாம்சங் மைக்ரோLED டி.வி. என்ற பெயரிட்டுள்ளது.

கடந்த 2018 வரை தியான்ஜினிலும், 2019 வரை ஹுய்சோவிலும் தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங்கிற்கு ஒரு ஸ்மார்ட்போன் தொழிற்சாலை இருந்தது, அவை இரண்டையும் மூடிய பிறகு, சீனாவில் சியான் மற்றும் சுஜோ ஆகிய இரு இடங்களிலும் இரண்டு தொழிற்சாலைகளை மட்டுமே இருந்தன. இப்போது, அவையும் மூடப்பட்டுள்ளது.

சீனாவிற்கு ஒட்டுமொத்தமாக கும்பிடு போட்டுவிட்டு வெளியேறும் அதே வேளையில், சாம்சங் இந்தியாவை அதன் ஏற்றுமதி மையமாக மாற்ற முயற்சிப்பதால், சாம்சங் அதன் தொழிலை இந்தியாவில் எங்கெல்லாம் துவங்கப்போகிறது என்பதை சற்று  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Views: - 7

0

0