கொரோனா ஊரடங்கால் சாம்சங், ஜியோமி, விவோ, ஆப்போ ஸ்மார்ட் போன் தயாரிப்புகள் நிறுத்தம்!!!

25 March 2020, 12:43 pm
Quick Share

COVID-19 ஊறடங்கால் பல மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பலரது தொழில்களும் முடக்கப்பட்டு உள்ளது. ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. சமீபத்தில் கிடைத்துள்ள தகவலின்படி இந்தியாவில் ஸ்மார்ட் போன் தயாரிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. 

இதில் முதல் வரிசையில் சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்களான ஆப்போ மற்றும் விவோ நிறுவனங்கள் நொட்டா பகுதியில் தங்களது தயாரிப்புகளை நிறுத்தி வைத்துள்ளனர். உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர் சௌத் கொரியன் ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங்கும் கொரோனா ஊறடங்கு காரணமாக நொட்டாவில் தயாரிப்பை ரத்து செய்துள்ளது. சூழ்நிலை மேம்படும் வரை தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க அறிவுறுத்தி உள்ளது.

மேலும் மற்றொரு சௌத் கொரியன் ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான LG யும் மார்ச் 31 வரை தனது தயாரிப்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறியுள்ளது. பிரபலமான ஸ்மார்ட் போன் நிறுவனமான ஜியோமி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பிய பிறகு பெங்களூரில் உள்ள தங்களது ஆலைகளை மூடுவதாக கூறியது.

இது குறித்து அந்நிறுவனம் டிவிட்டரில் செய்ய பதிவாவது,”எங்களது கார்ப்பரேட் அலுவலகம், வேர்ஹவுஸ், தயாரிப்பு ஆலைகள் மற்றும் சேவை மையங்கள் ஊறடங்கு உத்திரவின்படி நடந்து கொள்ளும்.” மேலும் COVID-19 யை எதிர்கொள்ள லட்ச கணக்கான முக கவசங்களை இந்திய அரசாங்கத்திற்கும் மருத்துவமனைகளுக்கும் வழங்கும் என ஜியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஆப்பிள் நிறுவனமும் ஐபோன்களை இந்தியாவில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதனை நிறுத்தி வைக்கப் போவதற்கான எந்த அறிவிப்பையும் இதுவரை அந்நிறுவனம் வெளியிடவில்லை. கடந்த மாதம் ஸ்ட்ராட்டெஜி அனாலிடிக்ஸ் (Strategy Analytics) வெளியிட்டுள்ள தகவலின்படி கப்பலின் மூலம் உலகமெங்கும் அனுப்பி வைக்கப்படும் சாதனங்களின் எண்ணிக்கை படுமோசமாக குறைந்துள்ளது என தெரிவிக்கின்றது.

இந்த எண்ணிக்கை இதுவரை காணாத 38 சதவீதம் குறைந்துள்ளது. பிப்ரவரி 2019 ல் 99.2 மில்லியன் சாதனங்கள் இருந்த நிலையில் தற்போது பிப்ரவரி 2020 ல் 61.8 மில்லியன் சாதனங்களே அனுப்பப்பட்டுள்ளன. மேலும் பல ஆலைகள் மூடப்படுவதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிக அளவில் குறைய நிறைய வாய்ப்புகள் உள்ளன.