சாம்சங் கேலக்சி Z ஃபோல்டு 3, ஃபிளிப் 3 போன்களுக்கான இந்தியா விலை மற்றும் விற்பனை தேதி வெளியானது | விவரங்கள் இங்கே | Samsung Galaxy Z Fold 3 | Z Flip 3

Author: Hemalatha Ramkumar
17 August 2021, 9:55 am
Samsung Z Fold3, Flip3's India pricing and sale date revealed
Quick Share

சாம்சங் நிறுவனம் தனது சமீபத்திய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி Z ஃபோல்டு 3 மற்றும் Z ஃப்ளிப் 3 ஆகிய ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் உலகளவில் அறிமுகம் செய்தது. இப்போது, தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் இந்த இரு ஸ்மார்ட்போன்களுக்குமான இந்திய விலை விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தியாவில், சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 3 போனின் 12GB/256GB மாடலுக்கு ரூ.1,49,999 விலையும் மற்றும் 12GB/512GB மாடலுக்கு ரூ.1,57,999 விலையும் நிர்ணயம் செய்துள்ளது.

அதே சமயம் சாம்சங் ஃபிளிப் 3 போனின் 8 ஜிபி/128 ஜிபி மாடலுக்கான விலை ரூ.84,999 ஆகவும் மற்றும் 8GB/256GB மாடலுக்கான விலை ரூ.89,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கைப்பேசிகள் செப்டம்பர் 10 முதல் விற்பனைக்கு வரும். வாடிக்கையாளர்கள் HDFC வங்கி கார்டு பயன்படுத்தி வாங்கும்போது ரூ.7,000 மதிப்பிலான கேஷ்பேக் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 3 விவரக்குறிப்புகள்

 • சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 3 6.2 இன்ச் AMOLED கவர் டிஸ்பிளே கொண்டுள்ளது, இது 2262 x 832 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 10MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. 
 • நீங்கள் சாதனத்தைத் திறக்கும்போது, ​​7.8 அங்குல மடிக்கக்கூடிய AMOLED பேனல் இருக்கும், இது 2208 x 1768 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டிருக்கும்.
 • இதில் 4 MP இன்-ஸ்கிரீன் கேமரா இருக்கும். இரண்டு டிஸ்பிளேவும் 120 Hz refresh rate ஐ கொண்டுள்ளன.
 • கேலக்ஸி Z ஃபோல்டு 3 குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC ஆல் இயக்கப்படுகிறது. இது 12 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி UFS 3.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
 • மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 25W சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
 • பின்புற கேமராவை பொறுத்தவரை, இது தனித்தனியே 12MP திறன் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

Samsung Galaxy Z Flip 3 விவரக்குறிப்புகள்

 • விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி Z ஃப்ளிப் 3 இரண்டு டிஸ்பிளேக்களைக் கொண்டுள்ளது.
 • உட்புறத்தில், இது 6.7 இன்ச் மடிக்கக்கூடிய AMOLED டிஸ்பிளே உடன் 2640×1080 பிக்சல்கள் ரெசல்யூஷன், 120 Hz ஸ்கிரீன் refresh rate மற்றும் 1200 நிட்ஸ் உச்ச பிரகாசம் ஆகியவற்றை வழங்கும். 
 • வெளிப்புறத்தில், உங்களுக்கு 1.9 அங்குல சூப்பர் AMOLED திரை கிடைக்கும். இது 512×260 ரெசல்யூஷன் மற்றும் 935 நிட்ஸ் பிரகாசத்தை வழங்கும். 
 • இந்த சிறிய திரை தேதி மற்றும் நேரம் போன்ற விவரங்களைக் காட்டும்.
 • புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி Z ஃபிளிப் 3 ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் செயலி உடன் இயக்கப்படுகிறது, இதன் அதிகபட்ச வேகம் 2.84 GHz ஆகும். 
 • இந்த செயலி 8 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் ஸ்பேஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 
 • இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான OneUI 3.0 இல் இயங்குகிறது. 
 • கேமராவைப் பொறுத்தவரை, கேலக்ஸி Z ஃப்ளிப் 3 12 MP வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 12 MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 
 • செல்ஃபிக்களை க்ளிக் செய்ய முன்பக்கத்தில் 10 MP கேமரா இருக்கும். 
 • பின்புற கேமரா அமைப்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் உடன் பாதுகாக்கப்படுகிறது மற்றும் இது 10x டிஜிட்டல் ஜூம், HDR10+ ரெக்கார்டிங் மற்றும் ஆட்டோ-ஃபோகஸ் டிராக்கிங் அம்சத்தை வழங்குகிறது.
 • இணைப்பிற்காக, கேலக்ஸி Z ஃப்ளிப் 3 வைஃபை 802.11, ப்ளூடூத் வி 5.1, யூஎஸ்பி டைப்-சி, என்எப்சி, ஜிபிஎஸ், கலிலியோ, GLONASS, Beidou மற்றும் 5ஜி தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. 
 • இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது மற்றும் இது IPX8 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு பூச்சுடன் வருகிறது. 
 • ஆடியோவைப் பொறுத்தவரை, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மடிக்கக்கூடிய டிஸ்பிளே ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்துடன் சரவுண்ட் சவுண்ட் உள்ளது, இதில் டால்பி டிஜிட்டல், டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆகியவை அடங்கும்.
 • கேலக்ஸி Z ஃப்ளிப் 3 ஸ்மார்ட்போனில் 3,300 எம்ஏஎச் பேட்டரி 15W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், 10W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் டெக்னாலஜி மற்றும் 4.5 ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் டெக்னாலஜி ஆதரவு உள்ளது.

Views: - 537

0

0