சாம்சங்கின் மலிவான கேலக்ஸி Z ஃபோல்டு லைட் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில்!

29 August 2020, 1:52 pm
Samsung’s cheaper Galaxy Z Fold Lite is coming to India soon
Quick Share

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் மலிவான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிறுவனம் கேலக்ஸி Z ஃபோல்டு லைட் என அழைக்கப்படும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் வேலை செய்து  வருவதாக கூறப்படுகிறது.

மாதிரி எண் SM-F415F / DS உடன் புதிய ஸ்மார்ட்போன் சாம்சங் அதிகாரப்பூர்வ இந்தியா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. மாடல் எண்ணில் உள்ள F என்பது ஸ்மார்ட்போன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது. மேலும், இது வைஃபை அலையன்ஸ் சான்றிதழ் தளத்தில் தோன்றிய அதே மாதிரி எண் ஆக உள்ளது. மாடல் எண்ணில் உள்ள DS என்பது வரவிருக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கென-குறிப்பிட்ட மாறுபாடாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது.

இதற்கிடையில், SamMobile தளத்தின் ஒரு அறிக்கை சாம்சங் நிறுவனம் மூன்றுக்கும் மேற்பட்ட ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்களில் வேலை செய்து வருகிறது என்பதைக் குறிக்கிறது. 

இந்த பிராண்ட் கேலக்ஸி Z ஃபோல்டு லைட், கேலக்ஸி Z ஃபோல்டு S மற்றும் கேலக்ஸி Z ஃபோல்டு 3 ஆகியவற்றில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த மூன்றில், SM-F415F / DS என்பது கேலக்ஸி Z ஃபோல்டு லைட் ஸ்மார்ட்போன் தான் என்று கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 3 இல் பயன்படுத்தப்படும் அல்ட்ரா மெல்லிய கண்ணாடி (UTG) க்கு மாறாக, மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வண்ணமற்ற பாலிமைடு (CPI) வகை பிளாஸ்டிக்குகளுடன் வருவதாகக் கூறப்படுகிறது. 

இதற்கிடையில், கேலக்ஸி Z ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனை செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் செப்டம்பர் 1 ஆம் தேதி அன்பேக்டு பார்ட் 2 மெய்நிகர் நிகழ்வின் போது அறிமுகப்படுத்தப்படும் என்று பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது. நிகழ்வு 10:00 AM ET (7:30 PM IST) மணிக்கு தொடங்கும். வெளியீட்டு நிகழ்வின் போது, ​​மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்களையும் அதன் விலை மற்றும் கிடைக்கும் விவரங்களையும் பெறுவோம்.

Views: - 0

0

0