மார்ச் மாதத்தில் விற்கப்பட்ட BS4 வாகனங்களைப் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி | முழு விவரம் அறிக

13 August 2020, 9:03 pm
SC allows registration of BS4 vehicles sold in March
Quick Share

மார்ச் மாதத்தில் விற்பனைச் செய்யப்பட்ட BS4 வாகனங்களைப் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் தற்போது அனுமதி அளித்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோயின் காரணமாகப் பதிவு செய்யும் செயல்முறையை முடிக்க முடியாமல் போன வாகனங்களுக்கு இப்போது அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை 8 ம் தேதி நீதிமன்றம் தனது மார்ச் 27 உத்தரவை நினைவு கூர்ந்தது, அதன் படி டெல்லி தவிர, இந்தியா முழுவதும் 10 நாட்களுக்கு BS4 வாகனங்களை விற்பனைச் செய்ய அனுமதி வழங்கியதைக் குறிப்பிட்டது.

உச்சநீதிமன்றம் தாக்கல் செய்தப் பிரமாணப் பத்திரத்தில், விற்கப்பட்ட வாகனங்கள் மற்றும் இ-வாகன் போர்ட்டலில் பதிவேற்றப்பட்ட வாகனங்கள் குறித்த விவரங்களை அரசாங்கம் வழங்கியிருந்தது. ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள தகவல்கள் வாகன் மற்றும் வாகன் அல்லாத மாநிலங்களிலும் கிடைத்த தகவல்களிலிருந்து சரிபார்க்கப்பட்டுள்ளன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கிடைத்த விவரங்களின்படி இந்த ஆண்டு மார்ச் 12 முதல் மார்ச் 31 வரை மொத்தம் 9,56,015 BS4 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 9,01,223 பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 1, 2020 முதல் இந்தியாவில் எந்த BS4 வாகனங்களை விற்கவோ பதிவு செய்யவோ கூடாது என்று நீதிமன்றம் 2018 ல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: அடுத்த ஐந்து வருடத்தில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மையமாக மாறும் இந்தியா!!!(Opens in a new browser tab)

Views: - 9

0

0