ஓலா ஸ்கூட்டருக்கு போட்டியாக களமிறங்கும் சிம்பிள் ஒன் ஸ்கூட்டரை எப்போது முன்பதிவுச் செய்யலாம்?

Author: Dhivagar
6 August 2021, 3:19 pm
Simple One pre-orders to begin from 15 August
Quick Share

பெங்களூருவைச் சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான சிம்பிள் எனர்ஜி, தனது முன்னணி இ-ஸ்கூட்டரை 15 ஆகஸ்ட் 2021 அன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளது. புதிய சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முதலில் பெங்களூரில் வெளியிடப்படும்.

இந்த வாகனம் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், கோவா, உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் வழங்கப்படும். இந்த மாநிலங்களின் முக்கிய நகரங்களில் நிறுவனத்திற்கு சொந்தமான அனுபவ மையங்களை சிம்பிள் எனர்ஜி அறிமுகம் செய்யும். இந்த நிறுவனம் தமிழ்நாடு ஓசூரில் உள்ள தொழிற்சாலையில் மின்சார ஸ்கூட்டரை தயார் செய்யவுள்ளது. இந்த ஆலை ஆண்டுதோறும் பத்து லட்சம் அலகுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 4.8kWh லித்தியம்-அயன் பேட்டரியைப் பயன்படுத்தும், இது eco mode இல் 240 கிமீ பயண வரம்பை வழங்கும். வாகனத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ என மதிப்பிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 0-50 கிமீ வேகத்தை 3.6 வினாடிகளில் எட்டும். அம்ச பட்டியலில் மிட் டிரைவ் மோட்டார், நீக்கக்கூடிய பேட்டரி, டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஆன் போர்டு நேவிகேஷன் மற்றும் ப்ளூடூத் போன்ற அம்சங்கள் அடங்கும். சிம்பிள் எனர்ஜி அதன் வரவிருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1,10,000 முதல் ரூ.1,20,000 க்குள் விலை நிர்ணயம் செய்யும்.

Views: - 360

0

0