பாம்புகளைப் பற்றி அனைத்து தகவல்களும் விரல் நுனியில்! வந்தாச்சு ஸ்னேக்பீடியா ஆப்!

9 February 2021, 12:45 pm
Snakepedia, another app to know the reptile up close
Quick Share

பிப்ரவரி 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட கேரளாவின் பாம்புகளைப் பற்றிய “SnakePedia” (ஸ்னேக்பீடியா) எனும் பயன்பாடு பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாம்புகள் தொடர்பான எல்லாவற்றையும், அவற்றை அடையாளம் காண்பதற்கு பாம்புக் கடியை எவ்வாறு குணப்படுத்துவது என்பதையும் பயனர்களுக்குக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த பயன்பாடு,  பிளே ஸ்டோரிலிருந்து நான்கு நாட்களில் 10,000 க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களைக் பெற்றுள்ளது.

இந்த ஸ்னேக்பீடியா ஆண்ட்ராய்டு ஆப் ஆனது, மாநிலத்தில் காணப்படும் பல்வேறு வகையான பாம்புகளைப் பற்றிய தகவல்களைப் பாட்காஸ்ட்ஸ், இன்ஃபோ-கிராபிக்ஸ், புகைப்படங்கள் போன்ற வடிவங்களில் கொண்டுள்ளது. இது பாம்புக்கடி சிகிச்சைகள், முதலுதவி போன்ற தகவல்களை வழங்கவும், கட்டுக்கதைகள் மற்றும் மூடநம்பிக்கைகளைப் போகவும் ஒரு முக்கியமான கருவியாக உள்ளது. 

முதன்மை மொழி மலையாளமாக அமைக்கப்பட்டிருந்தாலும், அதை ஆங்கிலத்திலும் நாம் கற்று அறிந்துக்கொள்ளலாம். இந்த பயன்பாடு முக்கியமாக பாட்காஸ்ட் மற்றும் ஆன்லைன் ID ஹெல்ப்லைனைத் தவிர ஆஃப்லைனிலும் செயல்படுவதாக மாத்ருபூமி தெரிவிக்கிறது.

இந்த பயன்பாட்டில் கேரளாவில் காணப்படும் 12 பாம்புக் குடும்பங்களில் 72 இனங்களைச் சேர்ந்த 100 வகையான பாம்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த பயன்பாட்டில் பெரிய பாம்புகளின் 675 க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன, இவை மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் 130 க்கும் மேற்பட்டவர்களால் படம் எடுக்கப்பட்டுள்ளன. பாம்புகளில் விஷம் இருப்பவை மற்றும் விஷம் இல்லாதவை, ஒரே தோற்றம் உடையவை மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பயன்பாட்டை விஞ்ஞானிகள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் குழு உருவாக்கியுள்ளது. பயன்பாட்டின் யோசனை முதலில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது, ஆனால் இது கடந்த ஒரு வருடத்தில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

பயன்பாட்டை மேலும் பயனர்களுக்கு இணக்கமாக மாற்றுவதற்கு, பாம்பின் தன்மை குறித்து பொது மக்களுக்கு அறிவுறுத்துவதற்கும், பயன்பாட்டில் உள்ளமைக்கப்பட்ட ‘Ask Expert’ கருவியும் உள்ளது. அதன் மூலம் மக்கள் படங்களை பதிவேற்ற அல்லது ஊர்வன தொடர்பான அவர்களின் கேள்விகளை முன்வைக்கலாம்.

இந்த பயன்பாட்டை காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் மற்றும் மாநில நிதி மந்திரி TM தாமஸ் ஐசக் ஆகியோர் விளம்பரப்படுத்தியுள்ளனர்.

“செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பாம்புகளை அடையாளம் காண ஆஃப்லைன் அம்சத்தை உருவாக்குவதே எங்கள் அடுத்த நோக்கம். விரைவில் அதையும் சேர்ப்போம் என்று நம்புகிறோம். உயிர்காக்கும் கருவியாக இந்த பயன்பாடு பயனுள்ளதாக இருக்கும்” என்று இந்த பயன்பாட்டு குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

Views: - 0

0

0