என்னடா இது… கூகிள் பிக்சல் 5 பயனர்களுக்கு வந்த சோதனை! நெட்ஃபிலிக்ஸ் ஸ்ட்ரீம் செய்ய முடியாதா?

12 April 2021, 9:37 am
Some Google Pixel 5 users can't stream Netflix because of THIS issue
Quick Share

சில பிக்சல் 5 பயனர்கள் சமீபத்தில் கூகிளின் widevine DRM இயங்குதளத்தில் ஒரு பிழை இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களின் தொலைபேசிகள் வழக்கமான HD மற்றும் HDR 10 தரத்திற்கு பதிலாக நெட்ஃபிலிக்ஸ் வீடியோக்களை SD தரத்தில் மட்டுமே ஸ்ட்ரீம் ஆகின்றன.

தி வெர்ஜ் தளத்தில் வெளியான தகவலின் படி, கூகிள் நிறுவனத்துக்கு இந்த சிக்கல் தெரிந்திருக்கிறது. மேலும் இதையடுத்து ஒரு Firmware பிழைத்திருத்தத்திலும் செயல்பட்டு வருகிறது, ஆனால் அதை இன்னும் சோதனைச் செய்து சரிபார்க்க வேண்டும், எனவே அது எப்போது வெளியிடப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த சிக்கல் அதிக பயனர்களுக்கு இல்லை என்றாலும், பாதிக்கப்பட்ட பிக்சல் 5 சாதனங்களைக் கொண்டுள்ள பயனர்களுக்கு வழக்கமான widevine L1 க்கு பதிலாக, widevine’s L3 நிலைக்கு தரமிறக்கச் செய்கிறது. இந்த widevine L1 தான் நெட்ஃபிலிக்ஸ் க்கான HD மற்றும் HDR பிளேபேக்கை அனுமதிக்க அங்கீகரிக்கிறது. .

தொலைபேசியின் சமீபத்திய ஏப்ரல் security update மூலம் தான் இந்த பிரச்சினை உருவாகியுள்ளதாக தெரிகிறது, இருப்பினும் இதுதான் காரணமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. 

Widevine என்பது கூகிள் DRM சேவையாகும், இது நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் மற்றும் கூகிள் பிளே மூவிஸ் உள்ளிட்ட பல்வேறு பிரீமியம் ஸ்ட்ரீமிங் நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.

மூன்று நிலை அமைப்பைப் பயன்படுத்தி உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது. L1 தான் மிகவும் பாதுகாப்பானது மற்றும் சாதனத்தின் செயலியில் நம்பகமான செயலாக்க சூழலில் அனைத்து உள்ளடக்க செயலாக்கமும் குறியாக்கவியலும் (cryptography) கையாளப்படுவதை இது உறுதி செய்கிறது.

L2 சாதனங்கள் அந்த பாதுகாப்பான சூழலில் மட்டுமே குறியாக்கவியல் செயல்பாடுகளை செயல்படுத்துகின்றன, அதே நேரத்தில் L3 சாதனங்கள் சிப்செட்டின் பாதுகாப்பான பகுதியில் எந்தவொரு உள்ளடக்க செயலாக்கத்தையும் குறியாக்கவியல் செயல்பாடுகளையும் செய்யாது.

பொதுவாக, ஸ்ட்ரீம் செய்யப்பட்ட உள்ளடக்கம் திருடப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, நிறுவனங்கள் உயர் தரமான HD, HDR மற்றும் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் 4K பதிப்புகளை மிகவும் பாதுகாப்பான L1 சாதனங்களில் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் கட்டளையிடுகின்றன.

தி வெர்ஜ் வழங்கிய தகவலின் படி, கூகிளின் பிக்சல் தொலைபேசிகள் L1-மதிப்பிடப்பட்ட சாதனங்களாக இருக்க வேண்டும், ஆனால் மேற்கூறிய சிக்கல் அதற்கு பதிலாக L3 வன்பொருள் கொண்டவையாக பதிவு செய்வதால் இந்த பிரச்சினை நிகழ்கிறது.

Views: - 62

0

0