உலகின் மிகச்சிறிய ஃபுல்-ஃபிரேம் சோனி கேமரா அறிமுகம் | விலை & விவரங்கள்

20 November 2020, 3:22 pm
Sony launches Alpha 7C, world's smallest & lightest full-frame camera
Quick Share

கேமரா என்றாலே சோனி பிராண்டுக்கு ஒரு தனி மதிப்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், கேமரா மற்றும் லென்ஸ் அவ்வளவு தரமானதாக இருக்கும். இப்போது சோனி உலகின் மிகச்சிறிய கேமரா மற்றும் லென்ஸை அறிமுகம் செய்துள்ளது. அதன் அம்சங்கள் மற்றும் விலை விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

சோனி இந்தியா சமீபத்தில் தங்கள் கேமரா வரிசையில், ஆல்பா 7C ஃபுல்-பிரேம் கேமரா (மாடல் ILCE-7C) மற்றும் FE 28-60 மிமீ F4-5.6 (மாடல் SEL2860) ஜூம் லென்ஸ் ஆகியவற்றை அறிவித்துள்ளது.

சோனியின் தகவலின்படி, ஆல்பா 7C உலகின் மிகச்சிறிய மற்றும் இலகுவான ஃபுல்-ஃபிரேம் கேமராவாகும், மேலும் FE28-60 மிமீ F4-5.6 என்பது உலகின் மிகச்சிறிய மற்றும் இலகுவான நிலையான ஜூம் லென்ஸாகும். புதிய கேமரா vlogger கள் மற்றும் வீடியோ படைப்பாளர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் கிடைக்கும் தன்மை

ஆல்பா 7C காம்பாக்ட் ஃபுல்-ஃபிரேம் கேமரா ஏற்கனவே அனைத்து சோனி மையங்கள், ஆல்பா முதன்மை கடைகள், www.ShopatSC.com போர்டல் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய மின்னணு கடைகளில் 2020 நவம்பர் 18 முதல் கிடைக்கிறது.

ஆல்பா 7C (பாடி மட்டும்) ரூ.167,990 க்கும், ஆல்பா 7CL (புதிய கிட் லென்ஸ் SEL2860 உடன்) ரூ.1,96,990 க்கும் விற்கப்படுகிறது. SEL2860 தற்போது ஆல்பா 7C உடன் கிட் லென்ஸாக மட்டுமே வழங்கப்படும், மேலும் இது ஜனவரி 2021 முதல் தனித்தனியாக கிடைக்கும்.

Views: - 1

0

0

1 thought on “உலகின் மிகச்சிறிய ஃபுல்-ஃபிரேம் சோனி கேமரா அறிமுகம் | விலை & விவரங்கள்

Comments are closed.