இந்தியாவில் இரண்டு புதிய சோனி BRAVIA 4K ஸ்மார்ட் டிவிகள் அறிமுகமாகியிருக்கு! விலையைக் கேட்டாலே… அப்பப்பா! Sony BRAVIA 4K smart TVs
Author: Hemalatha Ramkumar12 August 2021, 9:44 am
சோனி தனது சமீபத்திய BRAVIA தொடரில் XR-77A80J மற்றும் KD-85X85J என்ற இரண்டு பெரிய திரை கொண்ட ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிவிக்களின் விலை ரூ.4,99,990 முதல் ஆரம்பமாகிறது மற்றும் தற்போது முன்கூட்டிய ஆர்டர் செய்ய கிடைக்கின்றன.
சிறப்பம்சங்கள்:
- இரண்டு தொலைக்காட்சிகளும் 4K டிஸ்பிளே,
- டால்பி விஷன்,
- டால்பி ஆடியோ,
- டால்பி அட்மோஸ்,
- HDMI 2.1 ஆதரவு
- 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்.
முழு விவரங்கள்
- சோனி BRAVIA XR-77A80J மற்றும் BRAVIA KD-85X85J மாடல்கள் மெல்லிய பெசல்களுடன் மெல்லிய கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
- BRAVIA XR-77A80J மாடல் 77 அங்குல 4K (3840×2160 பிக்சல்கள்) OLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
- அடுத்ததாக BRAVIA KD-85X85J மாடல் 85 அங்குல 4K (3840×2160 பிக்சல்கள்) LCD பேனலைக் கொண்டுள்ளது. இரண்டும் HDR10, HLG மற்றும் டால்பி விஷன் ஆதரவை வழங்குகின்றன.
- ஒவ்வொரு மாடலிலும் நான்கு HDMI போர்ட்கள், மூன்று USB போர்ட்கள் மற்றும் ஒரு ஹெட்போன் ஜாக் ஆகியவைப் பொருத்தப்பட்டுள்ளது.
- XR-77A80J மாடல் டிவியில் சோனியின் தனியுரிம அறிவாற்றல் செயலி XR பிக்சர் இன்ஜினால் இயக்கப்படுகிறது, இது 4K அப்ஸ்கேலிங், மோஷன் கிளாரிட்டி மற்றும் XR ட்ரைலுமினஸ் ப்ரோ வண்ண மேம்பாடு ஆகியவற்றை வழங்குகிறது.
- இது நெட்ஃபிலிக்ஸ் கேலிபரேட்டட் மோட், உள்ளமைக்கப்பட்ட Chromecast மற்றும் ஆப்பிள் ஏர்ப்ளே ஆதரவு ஆகியவற்றை வழங்குகிறது.
- KD-85X85J மாடல் 4K HDR செயலி X1 பிக்சர் இன்ஜினிலிருந்து ஆற்றல் பெறுகிறது மற்றும் Motionflow XR 800 தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது.
- சோனி BRAVIA XR-77A80J இரண்டு 20W மற்றும் ஒரு 10W ஸ்பீக்கர்களை ஒலி தானியங்கி அளவுத்திருத்த ஆதரவுடன் கொண்டுள்ளது. BRAVIA KD-85X85J, மறுபுறம், இரண்டு 10W ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.
- இரண்டு தொலைக்காட்சிகளும் டால்பி அட்மோஸ், டால்பி ஆடியோ மற்றும் DTS டிஜிட்டல் சரவுண்ட் ஒலி ஆதரவை வழங்குகின்றன.
- கடைசியாக, அவை Android TV OS இல் இயங்குகின்றன மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளன.
- இந்தியாவில், சோனி BRAVIA XR-77A80J மாடலின் விலை ரூ.5,49,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 25 முதல் கிடைக்கும். BRAVIA KD-85X85J விலை ரூ.4,99,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 11 முதல் வாங்குவதற்கு கிடைக்கும்.
Views: - 421
0
0