அடுத்த ஆண்டில் ‘மினி’ சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் | எதிர்ப்பார்ப்புடன் சோனி ரசிகர்கள்

23 November 2020, 9:29 pm
Sony Xperia Smartphone With 'Mini' Design Expected To Launch Early Next Year
Quick Share

ஸ்மார்ட் டிவிகள், கேமராக்கள், கேமிங் கன்சோல்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல வகையான கேஜெட்களுக்கு சோனி பிராண்ட் மிகவும் பிரபலமானது என்பது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. புதிய சோனி எக்ஸ்பீரியா 1 III மற்றும் எக்ஸ்பீரியா 10 III ஆகியவை 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகும். இந்த சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் தொடர் மேலும் விரிவடையும். கூடுதலாக, ஒரு சிறிய வடிவமைப்பு கொண்ட மற்றொரு ஸ்மார்ட்போனும் வளர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறிய டிசைனில் சோனி எக்ஸ்பீரியா

சோனி எக்ஸ்பீரியா 1 III மற்றும் 10 III ஆகியவை ஒரு சிறிய வடிவமைப்பைக், அதன் மற்றொரு மாறுபாடாக கொண்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கிடைத்த தகவல்களின்படி, சோனி 2021 ஆம் ஆண்டில் காம்பாக்ட் எக்ஸ்பீரியா வரிசையை மீண்டும் கொண்டு வரக்கூடும். வெய்போவில் டிப்ஸ்டர் மூலம் வெளியான ஒரு தகவலின்படி, வரவிருக்கும் ஸ்மார்ட்போன் ஏற்கனவே இருக்கும் மாடலின் சிறிய மாறுபாடாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிய எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள் தொடரின் கீழ் 5.5 அங்குல ஸ்மார்ட்போனில் சோனி செயல்பட்டு வருவதாக டிப்ஸ்டர் குறிப்பிடுகிறார், இது 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சோனி காம்பாக்ட் எக்ஸ்பீரியா ஸ்னாப்டிராகன் 775 சிப்செட்டிலிருந்து ஆற்றலைப் பெறும் என்று கூறப்படுகிறது.

Views: - 28

0

0