Clubhouse க்கு போட்டியாக Spotify GreenRoom லைவ் ஆடியோ ஆப் அறிமுகம் | Spotify புது முயற்சி!

17 June 2021, 4:37 pm
Spotify Launches Greenroom Live Audio App, A Clubhouse Rival
Quick Share

Greenroom என அழைக்கப்படும் நேரலை ஆடியோ பயன்பாடு ஒன்றை Spotify அறிமுகம் செய்துள்ளது. ஸ்வீடிஷ் ஆன்லைன் மியூசிக் ஸ்ட்ரீமிங் நிறுவனமான Spotify சமீப காலமாக தமிழகம் உட்பட உலகின் பல மக்களிடமும்  பிரபலமடைந்து வரும் Clubhouse க்கு போட்டியாக இந்த GreenRoom ஆடியோ பயன்பாட்டை அறிமுகம் செய்துள்ளது. Greenroom பயன்பாடு பயனர்கள் தங்கள் சொந்த விவாதங்களை நடத்த அல்லது மற்றவர்களால் உருவாக்கப்பட்ட நேரடி விவாதங்களில் சேர அனுமதிக்கிறது.

Betty labs நிறுவனத்தை Spotify கையகப்படுத்திய பிறகு Greenroom லைவ் ஆடியோ பயன்பாடு வெளியிடப்பட்டுள்ளது. Betty labs நிறுவனம் Locker Room எனப்படும் விளையாட்ட்டை மையமாக கொண்ட ஆடியோ தளத்திற்கென மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

சமூகம் சார்ந்த ஆடியோ பிரிவில் பல செயலிகள் பிரபலமாகி வரும் இந்த சூழலில் Spotify இந்த ஆடியோ பயன்பாட்டை அறிமுகம் செய்துள்ளது நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பாட்காஸ்ட்களைத் தவிர, சமூக ஆடியோ பிரிவில் கடந்த ஆண்டு அறிமுகமான கிளப்ஹவுஸ் தான் முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் முதல், கிளப்ஹவுஸ் இதுவரை 18 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது. 

ஸ்பாடிஃபை தவிர, ட்விட்டர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப நிறுவனங்களும் நேரலை ஆடியோ தளங்களை அறிமுகம் செய்துள்ளன. குறிப்பாக, ட்விட்டர் Spaces என்பதை அறிமுகப்படுத்தியது மற்றும் பேஸ்புக் Live Audio Rooms என்பதை உருவாக்கியது. இருப்பினும், இந்த தளங்கள் எதுவுமே இப்போதைக்கு பணமாக்கப்படாமல் இலவசமாக கிடைக்கின்றன. இது எவ்வளவு நாட்கள் இலவசமாக கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எனினும் Spotify இந்த ஆடியோ பிரிவில் போட்டியை எப்படி எதிர்கொள்ளபோகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Views: - 182

0

0