தீபாவளி சலுகைகளை வெளியிட்டுள்ள Spotify… நீங்களும் முந்திக்கோங்க!!!

Author: Hemalatha Ramkumar
11 October 2021, 4:28 pm
Quick Share

Spotify இன் பிரீமியம் அதாவது விளம்பரமில்லாத சேவை தீபாவளி தள்ளுபடி சலுகையைப் பெறுகிறது மற்றும் பயனர்கள் இப்போதே முந்திக்கொண்டு இந்த டீலை ஓகே செய்யலாம். இதன் மூலம் Spotify பிரீமியத்தை ஒரு முழு வருடத்திற்கும் பெற, வழக்கத்தை விட குறைவான கட்டணத்தை செலுத்தினாலே போதும். இதன்படி நிறுவனம் தனது 12 மாத ப்ரீபெய்ட் திட்டத்தை ரூ. 939 க்கு வழங்குகிறது.

Spotify பிரீமியம் பயனர்கள் இப்போது இந்த திட்டத்தை வாங்கினால் ஆண்டு சந்தாவில் ரூ 250 சேமிக்கலாம். இந்த ஒப்பந்தம் தற்போது கிடைக்கிறது மற்றும் இந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி முடியும் வரை இது செல்லுபடியாகும்.

Spotify பிரீமியம் சலுகை தனிப்பட்ட சந்தாக்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் மற்றும் முதல் முறையாக பிரீமியம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே. இருப்பினும், தற்போதுள்ள பிரீமியம் பயனர்களும் தாங்கள் இன்னும் தள்ளுபடியில் 12 மாத திட்டத்தை வாங்கவில்லை என்றால் இந்த சலுகையைப் பெறலாம். மேலும் இது கடந்த காலத்தில் ஒரு பிரீமியம் மினி திட்டத்தை செயல்படுத்திய பயனர்களுக்கும் அல்லது அவர்களின் நிலையான இலவச சோதனையை நிறுத்தியவர்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது.

இந்த ஒரு முறை பண்டிகை பிரீமியம் சலுகையுடன், ஸ்பாட்டிஃபை பிரீமியம் திட்டங்களின் ஒரு பகுதியாக பிற நான்கு சலுகைகளையும் தொடர்ந்து வழங்குகிறது. இதில் Spotify பிரீமியம் மினி, இன்டிவிசுவல்(Individual), டியோ மற்றும் ஃபேமிலி பிளான்ஸ் அடங்கும். இந்த திட்டங்களில் சேர்வதன் மூலம், பயனர்கள் விளம்பரமில்லாமல் பாடல்களை கேட்கலாம், ஆஃப்லைன் பிளேபேக் வசதிக்காக பாடல்களை டவுன்லோட் செய்யலாம் மற்றும் பல சாதனங்களுக்கான ஆதரவை அனுபவிக்கலாம். அது மட்டும் இல்லாமல் பயனர்கள் குரூப் லிஸனிங் செஷன்களை அமைத்து 10,000 பாடல்களை டவுன்லோட் செய்யலாம்.

Spotify பிரீமியம் மினி 30 பாடல்களை ஆஃப்லைனில் டவுன்லோட் செய்வதற்கான வரம்புடன் ஒரு நாளைக்கு ரூ .7 விலையில் சேவையை அனுபவிக்க உதவுகிறது. Spotify பிரீமியம் டியோ இரண்டு கணக்குகளை ஆதரிக்கிறது மற்றும் இது மாதத்திற்கு 165 ரூபாயில் கிடைக்கிறது. ஃபேமிலி பிளான் வாங்க மாதம் ரூ .199 செலவாகும் மற்றும் ஒன்றாக வாழும் குடும்பங்களுக்கு இது 6 கணக்குகள் வரை ஆதரிக்கிறது.

Views: - 545

0

0