ஆன்லைன் வகுப்புக்கு 27% மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினி இல்லை: NCERT தகவல்

22 August 2020, 12:03 pm
Students Do Not Have Smartphones or Laptops to Attend Online Classes
Quick Share

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ( National Council of Educational Research and Training – NCERT) சமீபத்தில் நடத்திய ஆய்வில், குறைந்த பட்சம் 27 சதவீத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள ஸ்மார்ட்போன்கள் அல்லது மடிக்கணினிகள் போன்ற வன்பொருள் வளங்கள் கிடைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் ஆன்லைன் கல்வி பயில மின் தடை மற்றும் மின் செயலிழப்பு ஆகியவைப் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதாக 28 சதவீத மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வில், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அதிபர்கள் அடங்கிய 34,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களிடம் கருத்தாய்வுகள் மேற்கொள்ளபட்டதாக கூறப்படுகிறது.

கடினமான பாடங்கள்

ஆன்லைன் வகுப்புகள் மூலம் கணிதம் கற்றுக்கொள்வது மிகவும் கடினமான இருப்பதாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பாடத்திற்கு ‘தொடர்பு, தொடர்ச்சியான ஆதரவு மற்றும் கண்காணிப்பு’ ஆகியவை தேவைப்படுவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதே போல் தான் அறிவியல் பாடமும். ஒரு சில மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் கடினமாக இருந்ததாக தெரிவித்தனர். மேலும், 17 சதவீத மாணவர்கள் ஆன்லைனில் மொழிக்கல்வி கற்க கடினமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள அதிகம் பயன்படுத்துவது ஸ்மார்ட்போன்கள் தான் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மாணவர்களிடையே இரண்டாவது பிடித்த விருப்பம் மடிக்கணினிகள். இதற்கிடையில், சுமார் 36 சதவீத மாணவர்கள் கற்றலுக்காக பாடப்புத்தகங்கள் மற்றும் பிற புத்தகங்களையே நம்பியுள்ளனர்.

சூழ்நிலை வழிகாட்டுதல்கள்

இந்த கண்டுபிடிப்புகளை கவனத்தில் கொண்டு, மாணவர்கள் சிறப்பாகக் கற்றுக்கொள்ள உதவும் வகையில் கல்வி அமைச்சகம் மாணவர்களின் கற்றல் மேம்பாட்டு வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. PTI இன் அறிக்கையின்படி, மூன்று வகையான சூழ்நிலைகளுக்கும் தனி வழிகாட்டுதல்கள் உள்ளன. இந்த சூழ்நிலைகளில் மாணவர்கள், போதுமான வசதி இருப்பவர்கள், வரையறுக்கப்பட்ட வசதியுடன் இருப்பவர்கள், ஏதும் இல்லாதவர்கள் என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் கருத்து

“இந்த வழிகாட்டுதல்கள் டிஜிட்டல் வளங்கள் இல்லாத குழந்தைகளுக்கு, தங்கள் வீடுகளில் கற்றல் வாய்ப்புகளைப் பெற, ஆசிரியர்கள் அல்லது தன்னார்வலர்கள் மூலம் உதவிகளை வழங்க வழி செய்யும். இது தவிர, வானொலி, தொலைக்காட்சி அல்லது ஸ்மார்ட்போன் ஆகியவற்றைப் பயன்படுத்தி பல்வேறு மாற்று வழிகளில் வீட்டிலேயே கற்கும் அனைத்து மாணவர்களின் கற்றல் குறைபாடுகளையும் சமாளிப்பதற்கான எங்கள் முயற்சிகளுக்கு இந்த வழிகாட்டுதல்கள் உதவும்” என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் கூறினார்.

Views: - 49

0

0