சிஸ்கா 10,000 mAh பவர் பேங்க் அறிமுகம் | விலை, அம்சங்கள் & விவரங்கள் இங்கே

1 December 2020, 4:16 pm
Syska launches a 10,000mAh power bank
Quick Share

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய WPB1002 பவர் பேங்கை அறிமுகம் செய்வதாக சிஸ்கா அக்சசரீஸ் இன்று அறிவித்துள்ளது. இந்த பவர் பேங்க் சார்ஜ் செய்வதற்கான 2-வழி டைப்-C உள்ளீடு மற்றும் வெளியீட்டு கேபிள் உடன் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, ஒருவரின் வசதிக்கு ஏற்ப இதைப் பயன்படுத்தலாம்.

சிஸ்கா WPB1002 பவர் பேங்க் பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்ல நேர்த்தியானது மற்றும் முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களில் ரூ.2899 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த பவர் பேங்க் நீலம் மற்றும் கருப்பு என இரண்டு விருப்பங்களில் கிடைக்கும்.

WPB1002 பவர் பேங்க் எந்தவொரு உற்பத்தி குறைபாடுகளுக்கும் எதிராக 6 மாத உத்தரவாதத்துடன் வருகிறது. இந்த தயாரிப்புக்கான உத்தரவாதம் வாங்கிய நாளிலிருந்து கணக்கிடப்படும்.

சிஸ்கா WPB1002 18W வேகமான சார்ஜிங்கை வழங்குகிறது மற்றும் ஒரே சமயத்தில் நான்கு சாதனங்களை சார்ஜ் செய்யலாம். மின்காந்த புல பாதுகாப்புடன் இணைக்கப்பட்டுள்ளதால் பவர் பேங்க் ஷார்ட் சர்கியூட் ஆவதை தடுக்கிறது, இது சாதனங்களை எந்த அழிவிலிருந்தும் பாதுகாக்கிறது. இந்த பவர் பேங்க் தேவையற்ற வெப்ப வெளியேற்றத்தை இது தடுக்கும் வகையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான மற்றும் அபாயகரம் இல்லாத அனுபவத்திற்காக கசிவுகள், அதிக வெப்பம் அல்லது அதிக சார்ஜ் ஆகுதல் போன்ற எந்தவொரு சிக்கலையும் தடுக்க சிஸ்கா WPB1002 பவர் பேங்க் 11 அடுக்கு பாதுகாப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. ஒற்றை சேனல் வழியாக மின்னோட்டத்தை பாய்ச்ச அனுமதிக்க சாதனத்தின் ஸ்மார்ட் சுற்று திட்டமிட்டு வடிவமைக்கப்ட்டுள்ளது.

Views: - 0

0

0