மருத்துவ பிரிவில் நுழைய பிரபல நிறுவனத்தை கையகப்படுத்தியது டாடா டிஜிட்டல்! விவரங்கள் இங்கே

14 June 2021, 2:46 pm
Tata Digital acquires 1mg to enter health and wellness space
Quick Share

பல மாதங்களாக பேச்சு வார்த்தை நடந்து வருவதாக வெளியான தகவலை அடுத்து, டாடா டிஜிட்டல் இறுதியாக 1mg நிறுவனத்தின் ஒரு மிகப்பெரிய பங்கைப் கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. எவ்வளவு தொகைக்கு 1 mg நிறுவனத்தின் பங்கு கையகப்படுத்தப்பட்டது என்ற தகவல் இன்னும் மறைமுகமாகவே உள்ளது. ஒரு மிகப்பெரிய வல்லமைமிக்க டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களின் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்த கையகப்படுத்தல் நிகழ்ந்துள்ளது.

இதற்கு முன்னதாக டாடா குழுமம் மளிகை விநியோக தளமான பிக் பாஸ்கெட் நிறுவனத்தை வாங்கியது, அதையடுத்து ஃபிட்னஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனமான க்யூர்ஃபிட்டிலும் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து  1mg நிறுவனத்தின் மிகப்பெரிய பங்கைக் கையகப்படுத்ததியதன் மூலம் டாடா குழுமம் வளர்ந்து வரும் மருத்துவ பிரிவிலும் தனது இருப்பை திடப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. இந்த 1mg நிறுவனம் ஒரு தனித்துவமான டிஜிட்டல் நுகர்வோர் சுகாதாரத் தளமாகும், இது B2C மருந்து சில்லறை விற்பனையை சிற்பபாக செயல்படுத்தி வருகிறது. அதே சமயம் குறைந்த விலையில் நோயறிதல் மற்றும் ஆய்வக சோதனைகள் போன்ற சேவைகளையும் வழங்குகிறது.

ஊரடங்கு சமயத்தில் மருத்துவ சேவைகளுக்காக நுகர்வோர் பலரும் ஆன்லைன் தளங்களுக்கு அதிக அளவில் ஈர்க்கும்போது கையகப்படுத்தல் ஒரு மூலோபாய கட்டத்தில் வருகிறது.

நாடு முழுவதும் 20,000 பகுதிகளில் ஒரு விரிவான வலையமைப்புடன் மூலம் B2C மற்றும் B2B மருந்து விநியோகம்  செய்வதோடு, மருத்துவர்களின் உதவியோடு டெலி-கன்சல்டேஷன் சேவைகளையும் வழங்குகிறது. இது இந்த எதிர்பாரா தொற்றுநோய் சமயத்திலும் நல்ல வளர்ச்சியைக் கண்டது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் முன்பதிவுகளின் வசதியுடன், நாடு முழுவதும் அதிநவீன நோயறிதல் ஆய்வகங்களையும் நிறுவனம் கொண்டுள்ளது. அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தனது சேவைகளையும் வழங்குகிறது.

வெற்றிகரமான ஃபிட்னஸ் ஸ்டார்ட்-அப் ஆன Curefit Healthcare நிறுவனத்தில் 75 மில்லியன் டாலர் முதலீட்டை செய்ததை அடுத்து 1mg நிறுவன கையகப்படுத்தல் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் டாடா குழுமம் அனைத்து நுகர்வோர் தேவைகளுக்கும் ஒரே இடத்தில் டிஜிட்டல் தீர்வை வழங்க முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிகிறது. இந்த இரண்டு முதலீடுகளும் நிச்சயமாக உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த மருத்துவ பிரிவில் நிறுவனத்தின் இருப்பை மேலும் பலப்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Views: - 1213

0

0