ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் வசதிகளுடன் டாடா ஹாரியர் XTA+ & சஃபாரி XTA+ அறிமுகம் | விலை & விவரங்கள்
Author: Hemalatha Ramkumar11 August 2021, 5:01 pm
டாடா ஹாரியர் XTA+ மற்றும் சஃபாரி XTA+ கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகியவற்றின் XTA+ மாடல்கலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹாரியர் XTA+ மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.19.14 லட்சம் ஆகவும் மற்றும் ஹாரியர் XTA+ டார்க் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.19.34 லட்சம், சஃபாரி XTA+ மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.20.08 லட்சம் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகியவை தற்போது இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கும் சிறந்த SUV கள் ஆகும். இந்த இரு SUV களும் இந்தியாவில் 41.2 சதவிகித சந்தைப் பங்கைக் கொண்டு உயர் SUV பிரிவில் முன்னணியில் இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இப்போது, டாடா மோட்டார்ஸ் இரண்டு எஸ்யூவிகளிலும் XTA+ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய மாடல் அறிமுகத்துடன், சில குறிப்பிட்ட அம்சங்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கும் அன்று டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. இரண்டு எஸ்யூவிகளிலும் அறிமுகமான XTA+ மாடல்கள் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
XTA+ மாடல்களில் LED DRL கள், 17 அங்குல அலாய் வீல்கள், புஷ்-பட்டன் ஸ்டார்ட், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, ஆட்டோ ஹெட்லேம்ப்ஸ், மழை-உணர்தல் வைப்பர்கள் போன்ற அம்சம் இருக்கும்.
இவை தவிர, சஃபாரி XTA+ மாடல் மூட் லைட்டிங், க்ரூஸ் கண்ட்ரோல், டயர் அழுத்த கண்காணிப்பு அமைப்பு, iRA இணைக்கப்பட்ட அம்சங்கள், போன்ற அம்சங்களையும் வழங்குகிறது.
டாடா ஹாரியர், டாடா சஃபாரி ஆகிய இரண்டும் KYROTEC டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 2.0 லிட்டர், இன்லைன்-நான்கு-சிலிண்டர் டர்போ-டீசல் இன்ஜின் ஆகும், இது 176.6 bhp மற்றும் 350 Nm உச்ச திருப்புவிசையை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதன் முன் சக்கரங்கள் 6-வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளன.
0
0