ரூ.6.6 லட்சம் மதிப்பில் Tata Tiago NRG இந்தியாவில் அறிமுகம் | முழு விவரங்கள் இங்கே

Author: Dhivagar
4 August 2021, 3:40 pm
Tata Tiago NRG launched in India
Quick Share

டாடா மோட்டார்ஸ் தனது டியாகோ NRG ஹேட்ச்பேக்கின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.6.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் ஆரம்பமாகும்.

இதன் சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, நான்கு சக்கர வாகனம் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் பல புதிய அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்ட கேபின் அமைப்பைக் கொண்டிருக்கும். இது BS6-இணக்கமான 1.2-லிட்டர், 3-சிலிண்டர், பெட்ரோல் இன்ஜினிலிருந்து ஆற்றல் பெறுகிறது. இதன் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

டாடா டியாகோ NRG ஒரு நேர்த்தியான கிரில் வடிவமைப்பு, பொன்னட், ஃபாக்ஸ் சில்வர் ஸ்கிட் பிளேட்டுகள், பிளாக் ரூஃப் மற்றும் ஸ்வீப்-பேக் ஹெட்லைட்களைக் கொண்டிருக்கும்.

அதன் பக்கங்களில், ரூஃப் ரெயில்ஸ், ORVMs, கருப்பு நிறத்திலான B-தூண்கள் மற்றும் 15 அங்குல எஃகு சக்கரங்கள் உள்ளன.

வாகனத்தின் பின்புற முனையை அலங்கரிக்கும் டெயில்லைட்ஸ், ஜன்னல் வைப்பர் போன்ற வடிவமைப்புகளை கொண்டிருக்கும்.

புதிய டாடா டியாகோ NRG BS6-இணக்கமான 1.2 லிட்டர், 3-சிலிண்டர், பெட்ரோல் இன்ஜின் உடன் 84 HP ஆற்றலையும், 113 Nm திருப்பு விசையையு உருவாக்கும் திறன் கொண்டது. காரில் டிரான்ஸ்மிஷன் கடமைகள் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ் மூலம் கையாளப்படுகிறது.

டாடா டியாகோ NRG (ஃபேஸ்லிஃப்ட்) சென்டர் கன்சோலுடன் கூடிய விசாலமான கேபின் அமைப்பையும், இன்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், ஹர்மன் சவுண்ட் சிஸ்டம், மேனுவல் ஏசி மற்றும் பிளாட்-பாட்டம் 3-ஸ்போக் ஸ்டீயரிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இது டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் 7.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றுக்கான ஆதரவையும் கொண்டுள்ளது.

பல ஏர்பேக்குகள் மற்றும் பின்புற பார்வை கேமரா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

இந்தியாவில், டாடா டியாகோ NRG யின் மேனுவல் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.57 லட்சம் ஆகவும், AMT மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.09 லட்சம் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஃபாரஸ்டா கிரீன், கிளவுடி கிரே, ஸ்னோ ஒயிட் மற்றும் ஃபயர் ரெட் ஆகிய நான்கு வண்ணங்களில் வழங்கப்படுகிறது.

Views: - 918

0

0