சாம்சங், ரெட்மி போன்களுக்கு போட்டியாக பட்ஜெட் விலையில் Tecno Pova 2 களமிறங்கியது | விலை & விற்பனை விவரங்கள்
Author: Hemalatha Ramkumar3 August 2021, 1:44 pm
டெக்னோ போவா ஸ்மார்ட்போனின் அடுத்த பதிப்பாக டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அதன் முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும்போது மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் நிரம்பியுள்ளது. இதில் ஒரு பெரிய 7,000 mAh பேட்டரி, மீடியாடெக் சிப்செட் மற்றும் பல அம்சங்கள் உள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி M12 மற்றும் ரெட்மி நோட் 10 போன்றவற்றுக்கு கடுமையான போட்டியை வழங்கக்கூடியதாக இருக்கும்.
டெக்னோ போவா 2 அம்சங்கள்
டெக்னோ போவா 2, 6.9 இன்ச் FHD+ IPS LCD டிஸ்பிளே உடன் பஞ்ச்-ஹோல் கட்அவுட்டுடன் வருகிறது. இந்த ஃபோன் மீடியாடெக் ஹீலியோ G85 ப்ராசசர் உடன் 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைந்து மைக்ரோ SD கார்டு உடனே விரிவாக்க அம்சத்தையும் கொண்டுள்ளது.
இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான XOS ஸ்கின் உடன் இயங்குகிறது. இந்த சாதனம் 7,000 mAh பேட்டரி உடன் 46 நாட்கள் ஸ்டாண்ட்பை டைம் மற்றும் 31 மணிநேர வீடியோ பிளேபேக் டைம் ஆகியவற்றை வழங்கும் என்று கூறப்படுகிறது.
கூடுதலாக, 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் முழு பேட்டரியையும் சார்ஜ் செய்ய 140 நிமிடங்கள் ஆகும். மேலும், டெக்னோ போவா 2 பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48 MP முதன்மை சென்சார், 8 MP இரண்டாம் நிலை லென்ஸ் மற்றும் ஒரு ஜோடி 2 MP சென்சார்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
முன்பக்கத்தில், இது 8 MP செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது, இதில் ஸ்லோ மோஷன், 10x ஜூம், சூப்பர் நைட் மோட் மற்றும் பிற அம்சங்களும் உள்ளன. இதன் மற்ற அம்சங்களில் பாதுகாப்பிற்காக சைட்-மவுண்டட் கைரேகை சென்சார் மற்றும் 4ஜி LTE, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, GPS மற்றும் USB டைப்-C போர்ட் ஆகியவை உள்ளன.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்
டெக்னோ போவா 2 வின் விலை அடிப்படை 4GB RAM + 64GB ROM விருப்பத்திற்கு ரூ.10,999 ஆகவும் மற்றும் 6 ஜிபி RAM + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலுக்கு ரூ.12,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதோடு, வாங்குபவர்ககளுக்கு அறிமுக சலுகையாக அமேசானில் ரூ.500 க்கான கூப்பன் கிடைக்கும். ஆகஸ்ட் 5, மதியம் 12 மணி முதல் கருப்பு, வெள்ளி மற்றும் நீல வண்ண விருப்பங்களில் வாங்குவதற்கு கிடைக்கும்.
0
0