டெலிகிராம் பயன்பாட்டில் ஆட்டோ டெலிட் அம்சம்! இது எப்படி வேலைச் செய்யும் தெரியுமா?

25 February 2021, 1:07 pm
Telegram rolls out auto-delete messages feature; here's how it works
Quick Share

வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகளைக் கட்டாயமாக்கியதை அடுத்து இந்தியாவில் வேகமாக புதிய பயனர்களைப் பெற்று வரும் டெலிகிராம், தனிப்பட்ட அரட்டைகள், குழுக்கள் மற்றும் சேனல்களுக்கான ஆட்டோ-டெலிட் மெசேஜ் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த அம்சம் ரகசிய அரட்டைகளுக்கு மட்டுமே கிடைத்தது.

இப்போது உடனடி செய்தி தளத்தின் பயனர்கள் செய்திகளை அனுப்புவதற்கு முன்பு எந்த அரட்டையிலும் 24 மணிநேரம் அல்லது 7 நாட்கள் வரை காலக்கெடுவை அமைக்க முடியும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குப் பிறகு, குழு அல்லது சேனலில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் அல்லது ஒரு தனிப்பட்ட அரட்டையில் ஒற்றை பெறுநருக்கும் செய்திகள் மறைந்துவிடும்.

குழு மற்றும் சேனல்களில் அட்மின்களால் மட்டுமே இந்த அம்சத்தை இயக்கவோ  அல்லது திருத்தவோ முடியும்.

எல்லா செய்திகளும் அவற்றின் நீக்குதல் நேரத்திற்கு கவுண்ட்டவுனைக் காட்டுகின்றன, பயனர்கள் குறிப்பிட்ட செய்திகளுக்கான நேரத்தை ஆண்ட்ராய்டில் ஒரு முறை கிளிக் செய்வைதன் மூலமும் அல்லது iOS போனில் பிரெஸ் & ஹோல்டு செய்வதன் மூலம் கண்காணிக்கலாம்.

டைமர் அமைக்கப்பட்ட பிறகு அனுப்பப்படும் செய்திகளுக்கு மட்டுமே தானாக நீக்குதல் (ஆட்டோ-டெலிட்) அம்சம் பொருந்தும், முந்தைய செய்திகள் Chat  இருக்கும் என்று டெலிகிராம் தெரிவித்துள்ளது.

அதிக தனியுரிமை மற்றும் சிறந்த பாதுகாப்போடு பயனரின் அரட்டை அனுபவத்தை மேம்படுத்த, டெலிகிராம் expiring invite links, invites உடன்  சேரும்போது ஸ்கேன் செய்யக்கூடிய QR குறியீடுகள், Android மற்றும் iOS க்கான முகப்புத் திரை விட்ஜெட்ஸ் உள்ளிட்ட பிற புதிய அம்சங்களையும் அறிமுகப்படுத்தியது.

பங்கேற்பாளர்கள் நேரடி குரல் அரட்டையுடன் (Live Voice Chat) இணைக்க அனுமதிக்கும் பிராட்காஸ்ட் குரூப்ஸ் எனப்படும் டெலிகிராம் குழுவின் புதிய வடிவமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எந்தவொரு ஸ்பேம் உள்ளடக்கம் அல்லது போலி கணக்குகள், வன்முறை, சிறுவர் துஷ்பிரயோகம், ஆபாச படங்கள் போன்ற எந்தவொரு உள்ளடக்கத்தையும் பயனர்கள் விரைவாகவும் எளிதாகவும் புகாரளிப்பதை வசதிகளை செய்துள்ளதாகவும் டெலிகிராம் தெரிவித்துள்ளது.

Views: - 1

0

0