ஒரே வீடியோ காலில் 1000 பேர்! வேற லெவல் அப்டேட்டை விட்டுத் தெறிக்கவிட்ட டெலிகிராம்!

Author: Dhivagar
2 August 2021, 2:02 pm
Telegram will now allow 1000 viewers to be part of video calls
Quick Share

டெலிகிராம் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அப்டேட்டுடன் பல புதிய அம்சங்களை தனது தளத்தில் சேர்த்துள்ளது. பயனர்கள் இப்போது 1000 பார்வையாளர்களுடன் குழு வீடியோ அழைப்புகளைச் செய்ய முடியும். இருப்பினும், 30 பயனர்கள் மட்டுமே அழைப்புகளில் பங்கேற்க முடியும், மீதமுள்ளவர்கள் அதைப் பார்க்க முடியும். 

இந்த புதிய அப்டேட்டுடன் வீடியோ செய்திகளை முன்பை விட உயர் தரத்தில் பதிவு செய்வதற்கான வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் நீங்கள் வழக்கமான வீடியோக்களை 0.5 அல்லது 2x வேகத்தில் பார்க்க முடியும். இந்த அப்டேட்டில் 1-ஆன்-1 அழைப்புகள் உட்பட அனைத்து வீடியோ அழைப்புகளுக்கும் ஒலியுடன் கூட ஸ்கிரீன் ஷேரிங் அம்சமும் இதனுடன் கிடைக்கும்.

டெலிகிராம் Group Video Calls 2.0 என்ற அம்சத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது, இதன் மூலம் 30 பயனர்கள் தங்கள் கேமரா மற்றும் திரை இரண்டிலிருந்தும் வீடியோவை ஒளிபரப்ப அனுமதிக்கிறது மற்றும் 1000 பேர் வரை இதில் சேர முடியும். பயனர்கள் அதிக தெளிவுத்திறனில் வீடியோ செய்திகளை பதிவு செய்யவும் முடியும். 

டெலிகிராமில் உள்ள மீடியா பிளேயர் இப்போது பயனர்களை 0.5x, 1.5x மற்றும் 2x ஆகிய மூன்று பிளேபேக் வேகத்தில் உள்ளடக்கத்தை இயக்க அனுமதிக்கும். அதே போல 0.2x வேகத்தையும் ஆதரிக்கிறது. 1-ஆன் -1 அழைப்புகளைச் செய்யும் போது பயனர்கள் தங்கள் திரைகளைப் பகிரவும் டெலிகிராம் இப்போது அனுமதிக்கும். 1 நாள் அல்லது 1 வாரம் அல்லது 1 மாதம் கழித்து தானாகவே டெலிட் ஆகும் வகையிலான மெசேஜ் அமைப்புகளையும் டெலிகிராம் சேர்த்துள்ளது.

இந்த டெலிகிராமில் உள்ள மீடியா எடிட்டர் இப்போது உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டிராயிங்ஸ், டெக்ஸ்ட் மற்றும் ஸ்டிக்கர்களுடன் அலங்கரிக்கவும் அனுமதிக்கும். சிறந்த விவரங்களை எளிதாகச் சேர்க்க, நீங்கள் பெரிதாக்கும்போது உங்கள் பிரஷின் அகலம் இப்போது குறைகிறது. இது ஒரு நிபுணரின் துல்லியத்தை உங்களுக்கு வழங்குகிறது.

iOS சாதனங்களில் டெலிகிராம் இப்போது ஒரு புதிய கேமரா ஆப்ஷனையும் பெறுகிறது. அதாவது உங்கள் சாதனத்தில் 0.5x மற்றும் 2x ஆகிய ஜூம் நிலைகள் கிடைத்தால் அவற்றை பயன்படுத்துவதற்கான ஆதரவும் இப்போது கிடைக்கும்.

Views: - 201

0

0