சர்வதேச செய்தி ஊடகங்கள் திடீர் செயலிழப்பு | ஒரே சமயத்தில் அனைத்து வலைத்தளங்களும் முடக்கம் | Global CDN outage

8 June 2021, 4:30 pm
The Guardian, CNN, other global media websites down
Quick Share

தி கார்டியன், சி.என்.என் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ், உள்ளிட்ட முக்கிய சர்வதேச ஊடக வலைத்தளங்கள், உலகளவில் செயலிழந்துள்ளன.

ஏறக்குறைய அனைத்து முக்கிய சர்வதேச ஊடக தளங்களும் அணுக முடியாமல் போயுள்ளன. “வலைத்தளத்தை சரிசெய்வதில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம், சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சிக்கவும்” என்று The NewYorker தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மற்ற தளங்கள் படத்தில் இருப்பதைப் போன்று பிழை செய்திகளை காண்பிக்கின்றன.

பிரிட்டனின் கார்டியன் வலைத்தளம் மற்றும் மொபைல் ஆப் இரண்டுமே செயலிழந்துள்ளது.

வேறு சில பிரிட்டிஷ் செய்தி ஊடகங்களின் தளங்களும் செயல்படவில்லை, அதே நேரத்தில் பைனான்சியல் டைம்ஸ், ப்ளூம்பெர்க் நியூஸ், அமேசான் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களின் தளங்களும் முடங்கியுள்ளன.

இங்கிலாந்து அரசாங்கத்தின் முக்கிய வலைத்தளமும் இயங்கவில்லை.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட உள்ளடக்க விநியோக வலையமைப்புகள் மற்றும் பல செய்து ஊடகங்கள் சொல்லி வைத்தாற்போல் செயலிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இன்னும் வலைத்தளங்கள் செயல்பாட்டுக்கும் வரவில்லை.

Views: - 194

0

0

Leave a Reply