போகோ F3 என்ற பெயரில் உலக சந்தைகளில் ரெட்மி K40?! விவரங்கள் இங்கே
2 March 2021, 4:20 pmரெட்மி K40 தொடர் கடந்த வாரம் சீனாவில் அறிமுகமானது, அதன் பின்னர் அந்தத் தொடரிலிருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் உலக சந்தையில் வெளியாகலாம் என்று வதந்திகள் பரவி வருகின்றன.
ரெட்மி K40 உலகளாவிய சந்தைகளில் போகோ F3 என மறுபெயரிடப்படும் என்று இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல் ரெட்மி K40 ப்ரோ அல்லது ரெட்மி K40 ப்ரோ+ போகோ F3 ப்ரோ ஆகவும் மறுபெயரிடப்படலாம் என்றும் ஊகங்கள் உள்ளன. ஆனால் இது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
ரெட்மி K40 போன்று போகோ F3 ஸ்மார்ட்போனும் ஸ்னாப்டிராகன் 870 SoC ஆல் இயக்கப்பட உள்ளது, மேலும் 5 ஜி ஆதரவுடன் வரும். இது 6 ஜிபி முதல் 12 ஜிபி ரேம் வரையிலான ரேம் உடனும் மற்றும் 128/256 ஜிபி ஸ்டோரேஜ் உடனும் வரக்கூடும்.
போகோ F3 பின்புறத்தில் மூன்று கேமராவுடன் வரக்கூடும். 48 MP முதன்மை கேமரா, 8 MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 5 MP மேக்ரோ கேமரா ஆகியவையும். செல்ஃபிக்களுக்கு முன்புறத்தில் 20 MP கேமராவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆற்றலைப் பொறுத்தவரை, 4,520 mAh பேட்டரி உடன் 33W வேகமான சார்ஜிங் ஆதரவு உள்ளது, இது ஸ்மார்ட்போனை 0% முதல் 100% வரை ஒரு மணி நேரத்திற்குள் சார்ஜ் ஆக முடியும்.
கொரில்லா கிளாஸ் 5 பாதுகாக்கப்பட்ட 6.67 இன்ச் 120 ஹெர்ட்ஸ் சூப்பர் அமோலெட் திரை இருக்கும். ரெட்மி K40 ஆண்ட்ராய்டு 11 MIUI 12 உடன் இயங்கியது, எனவே போகோ F3 வெளியாகும் போது, போகோ F3 MIUI 12.5 உடன் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0
0