ஐபோன் 4 தோற்றத்தில் உலகின் மிகச்சிறிய 4ஜி ஸ்மார்ட்போன் “Mony Mist”!

6 July 2021, 10:14 am
The world's 'smallest' 4G handset mony mist
Quick Share
  • 89.5 நீளம் 45.5 அகலம் 11.5 மிமீ தடிமன் கொண்ட மனி மிஸ்ட் என்ற ஸ்மார்ட்போன் தற்போது உலகின் மிகச்சிறிய 4ஜி ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது.
  • மிகவும் நேர்த்தியான மற்றும் மிகச்சிறிய வடிவமைப்புடன் ஐபோன் 4 போன்ற தோற்றத்தில், மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
  • மனி மிஸ்ட் 3.0 அங்குல LCD திரை, 13 MP பின்புற கேமரா, 1,250 mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 9 ஃபோர்க் பதிப்பில் இயங்குகிறது.
  • மனி மிஸ்ட் ஒரு சிறிய திரை அமைப்பைக் கொண்டுள்ளது, இது மேல் மற்றும் கீழ் பகுதியில் பெசல்களைக் கொண்டுள்ளது. பின்புறத்தில், ஒரு செவ்வக தொகுதிக்குள் ஒரு ஒற்றை ஸ்னாப்பர் வைக்கப்பட்டுள்ளது.
  • சாதனம் 3.0 அங்குல (480×854 பிக்சல்கள்) LCD திரையை 16:9 என்ற விகிதத்துடன் கொண்டுள்ளது.
  • இது ஒரு கருப்பு நிழல் தோற்றத்துடன் கிடைக்கிறது மற்றும் வெறும் 75 கிராம் மட்டுமே எடைக்கொண்டது.
  • மனி மிஸ்ட் ஒரு 13MP பின்புற கேமரா மற்றும் செல்ஃபிக்களை எடுக்க முன் பக்கத்தில் 0.3MP VGA ஸ்னாப்பரைக் கொண்டுள்ளது. இரண்டிலும் 480p தெளிவுத்திறனில் வீடியோக்களைப் படம் பிடிக்க முடியும்.
  • மனி மிஸ்ட் ஒரு குவாட் கோர் மீடியாடெக் MT6735 சிப்செட்டிலிருந்து ஆற்றல் பெறுகிறது, அதோடு 3 ஜிபி RAM மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவற்றை கொண்டுள்ளது. இருப்பினும், சேமிப்பக விரிவாக்கத்திற்காக மைக்ரோ SD கார்டு ஸ்லாட் இல்லை.
  • இந்த சாதனம் 1,250 mAh பேட்டரி உடன் ஆண்ட்ராய்டு 9 இல் இயங்குகிறது. இது டைப்-C போர்ட், இரட்டை மைக்ரோ SIM ஸ்லாட்டுகள், 4ஜி நெட்வொர்க், வைஃபை மற்றும் புளூடூத் 4.0 போன்ற பல்வேறு இணைப்பு விருப்பங்களுக்கான ஆதரவையும் வழங்குகிறது.
  • மனி மிஸ்ட் தற்போது கிரௌட் ஃபண்டிங் தளங்களில் $99 (சுமார் ரூ.7,300) விலையில் வாங்க கிடைக்கிறது. இருப்பினும் $150 (சுமார் ரூ. 11,140) விலையில் சில்லறை விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் இது எப்போது கிடைக்கும் என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.

Views: - 108

0

0