நினைத்த நேரத்தில் வாட்ஸ்அப்பில் மெசேஜ் பண்ண இப்படியொரு வசதி இருக்கா? இது தெரியாம போச்சே!

30 November 2020, 12:11 pm
These are the easiest way to schedule a message on Whatsapp! Click here to know
Quick Share

உங்கள் நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சரியாக 12 மணிக்கு சொல்லவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தாலும் வேறெதோவொரு வேலையின் காரணமாக அதை மறந்துவிடுகிறீர்களா அல்லது சரியான நேரத்தில் மெசேஜ்களை அனுப்ப முடியாமல் போகிறதா? இனிமேல் நீங்கள் நேரத்தைத் தவறவிடுவது பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை. 

ஏனென்றால் ஒரு சிறப்பான மூன்றாம் தரப்பு செயலியான SKEDit ஐப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த செயலியின் மூலம் வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜை சரியான நேரத்திற்கு அனுப்ப திட்டமிட முடியும். அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

ஆன்ட்ராய்டு போனில் வாட்ஸ்அப் மெசேஜ்களை Schedule செய்வது எப்படி?

 • Google Play Store க்குச் சென்று SKEDit என்ற செயலியைத் தேடி Install செய்யவும்.
 • பின்னர் SKEDit செயலியில் Login செய்யவும். 
 • SKEDit செயலியில் Login செய்த பிறகு, மெயின் மெனுவுக்குச் சென்று வாட்ஸ்அப் விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
 • இதற்குப் பிறகு, SKEDit உதவியுடன், நீங்கள் அனுப்ப விரும்பும் செய்தியைச் சேர்த்து, பின்னர் செய்தியை அனுப்ப வேண்டிய தேதி மற்றும் நேரத்தை திட்டமிடுங்கள்.
 • மீண்டும் மீண்டும் செய்வதற்கான விருப்பமும் உள்ளது, இதன் உதவியுடன் நீங்கள் செய்திகளை மீண்டும் மீண்டும் அனுப்பவும் முடியும்.

ஐபோனில் ஆன்ட்ராய்டு போனில் வாட்ஸ்அப் மெசேஜ்களை Schedule செய்வது எப்படி?

 • ஆப் ஸ்டோருக்குச் சென்று ShortCuts செயலியைப் பதிவிறக்கி Install செய்யவும். பின்னர் செயலியைத் திறக்கவும்.
 • Automation எனும் தாவலை கீழ் வலதுபுறமாகக் காண்பீர்கள். தனிப்பட்ட ஆட்டோமேஷனை உருவாக்கு + ஐகானைக் கிளிக் செய்க.
 • இதற்குப் பிறகு, அடுத்த திரையில் Time of Day to run automation என்பதைத் தேர்ந்தெடுக்கவும். செய்திகளைத் திட்டமிட அனுப்ப வேண்டிய தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
 • தேடல் பட்டியில் Add Action என்பதைக் கிளிக் செய்து, பட்டியலில் தோன்றும் உரையைத் தேர்ந்தெடுக்கவும்.
 • இதற்குப் பிறகு நீங்கள் Send Message via WhatsApp என்பதைக் காண்பீர்கள், அதைக் கிளிக் செய்து Next பொத்தானைக் கிளிக் செய்க.
 • இதற்குப் பிறகு, அடுத்த திரையில் நீங்கள் Done பொத்தானைக் காண்பீர்கள், அதைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தி திட்டமிடப்படும்.

அவ்வளவுதான்!

Views: - 31

0

0