கொரோனா வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் ஹெல்மெட்!

17 November 2020, 10:03 am
These Helmets Are All You Need To Protect Yourself From Coronavirus
Quick Share

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் நிலையில் முகக்கவசங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.  ஆனால் வழக்கமான அறுவை சிகிச்சை மாஸ்க் அல்லது N95 மாஸ்க்குகளின் நம்பகத்தன்மை இன்னும் கேள்விக்குரியது. 

இதன் காரணமாக கண்டுபிடிப்பாளர் யெசின் அல்-கெய்சி முகக்கவசங்களுக்கு ஒரு முழுமையான மாற்றத்தை வழங்க நினைத்தார். அவர் தனது தலையை முழுவதுமாக மறைத்து மார்பு வரை நீட்டிக்கும் ஹஸ்மத் ஹெல்மெட்டை உருவாக்கினார்.

ஹெல்மெட் பின்புறத்தில் ஒரு பேட்டரியுடன் ஒரு ஃபில்டர் ரெசிபிரேட்டர் உடன்  உறிஞ்சும் காற்றை சுத்திகரிக்கிறது மற்றும் உள்ளே இருக்கும் காற்றை வெளியேற்றுகிறது. இதன் உருவாக்குனரின் தகவலின்படி ஹெல்மெட் உங்களுக்கு ஏற்ற ஸ்டைலில் இல்லாமல் போகலாம், ஆனால் அதன் வேலையைச் சரியாகச் செய்வதாகத் தெரிகிறது. 

These Helmets Are All You Need To Protect Yourself From Coronavirus

இந்த ஹெல்மெட் BioVYZR என அழைக்கப்படுகிறது, மேலும் இது 12 மணிநேர பேட்டரி பேக்அப் வழங்குவதாகக் கூறப்படுகிறது. VYZR டெக்னாலஜிஸ் ஆயிரக்கணக்கான தயாரிப்புகளை விற்பனை செய்துள்ளதாகவும் இதன் உருவாக்குனர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற யோசனை அவருக்கு மட்டும் வந்துவிடவில்லை. அமெரிக்க கடற்படை வீரர் கிறிஸ் எஹ்லிங்கர் அவர்களும் அத்தகைய தலைக்கவசங்களை உருவாக்கியுள்ளார். வல்ஹல்லா மெடிக்கல் டிசைன் என்ற அவரது நிறுவனம் அதன் இலாகாவின் கீழ் NE-1 என்ற தயாரிப்பை உருவாக்கியுள்ளது. இது ஒரு மோட்டார் சைக்கிள் ஹெல்மட்டை போன்று இருக்கிறது மற்றும் காற்று வடிகட்டுதல் அமைப்பைக் கொண்டுள்ளது.

தவிர, இது உள் மற்றும் வெளிப்புற ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது, இதை அணிந்துள்ளவர் சுற்றியுள்ளவர்களுடன் பேச விரும்பும்போது அதற்கு ஏற்றதாகவும் உள்ளது. அது மட்டுமல்லாமல், ஹெல்மெட் ப்ளூடூத் ஆடியோவையும் கொண்டுள்ளது, அழைப்புகள் மற்றும் இசை கேட்கவும் தொந்தரவு இல்லாத பயன்முறையை வழங்குகிறது.

ஆனால் பெரிய கேள்வி என்னவென்றால், கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பில் இருக்கும்போது இந்த தலைக்கவசங்கள் அவசியமா என்பதுதான். ஆனால், PAPR ஹெல்மெட் விற்கும் மைக்கேல் ஹால், மோசமான காற்றின் தரத்தால் ஆபத்தில் உள்ளவர்களுக்கு இந்த ஹெல்மெட் நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகிறார்.

Views: - 24

0

0