சத்தமே இல்லாமல் 5,000 மின்சார ஸ்கூட்டர்கள், ரிக்ஷாக்களை விற்பனை | அசத்திய கோயம்புத்தூர் நிறுவனம் | Ampere | Ele | MLR | Greaves Cotton

Author: Dhivagar
4 September 2021, 5:23 pm
This EV company sold 5,000 electric scooters, rickshaws in India last month
Quick Share

கடந்த மாதம் இந்திய சந்தையில் 5,000 மின்சார வாகனங்களை விற்பனை செய்ததாக கிரீவ்ஸ் காட்டனின் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ஆம்பியர் எலக்ட்ரிக் (Ampere Electric) அறிவித்துள்ளது. 

2021 ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை விற்பனை மிகச் சிறப்பாக நடந்து ஒரு புதிய விற்பனை அளவுகோலை எட்டியுள்ளதாக நிறுவனம் பகிர்ந்து கொண்டுள்ளது.

கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம் சமீபத்தில் தனது சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தி உள்ளது. அதன்படி ஆம்பியர் பிராண்டிலிருந்து மின்சார இரு சக்கர வாகனங்கள், Ele பிராண்டிலிருந்து மின்சார ரிக்ஷாக்கள் மற்றும் MLR பிராண்டிலிருந்து மின்சார-ஆட்டோக்களை தயார் செய்து வருகிறது.

இந்த ஆம்பியர் மின்சார வாகனங்கள் மக்களின் தேவைக்கு ஏற்றவாறு, கையாள மிகவும் எளிமையாக இருப்பதால் இந்த மிகப்பெரிய விற்பனை வரம்பை எட்டியுள்ளது. 

நுகர்வோர் நடத்தை, மேம்பட்ட சுற்றுச்சூழல் உணர்வு, பெட்ரோல் விலை உயர்வு, விரைவான நகரமயமாக்கல் மற்றும் சமூக இடைவெளி போன்ற குறிப்பிடத்தக்க கோவிட் நெறிமுறைகள் போன்ற காரணங்களால், வாடிக்கையாளர்கள் பாரம்பரிய பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்களிலிருந்து புதிய மின்சார வாகனங்களுக்கு மாறிக்கொண்டிருப்பதாக கிரீவ்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய மின்சார வாகன மெகா உற்பத்தி தொழிற்சாலையை துவங்கி அதிகரித்து வரும் மின்சார  வாகனங்களின் தேவையைப் பூர்த்திச் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Views: - 192

1

0