இந்தியாவில் மேலும் மூன்று ஓப்போ ஸ்மார்ட்போன்களின் விலை நிரந்தரமாக குறைப்பு

25 November 2020, 8:30 pm
Three More Oppo Smartphones Witness Permanent Price Cut In India
Quick Share

ஓப்போ அதன் மலிவு விலையிலான ஸ்மார்ட்போன்களுக்காக இந்திய நுகர்வோர் மத்தியில் மிகவும் பிரபலமான பிராண்டாகும். நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகள் மற்றும் விலைக் குறைப்புகளை வழங்குவதன் மூலம் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, ஓப்போ A15 இன் விலை குறைக்கப்பட்டது. இப்போது, ​​நிறுவனம் மேலும் மூன்று மாடல்களின் விலையை இந்திய சந்தையில் நிரந்தரமாக குறைத்துள்ளது.

இந்தியாவில் விலைக் குறைப்பைப் பெற்ற புதிய ஓப்போ ஸ்மார்ட்போன்கள்

ஓப்போ ‘A’, ‘ரெனோ’ மற்றும் ‘F’ தொடரிலிருந்து ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அளித்துள்ளது. ஓப்போ A15, ஓப்போ ரெனோ 3 ப்ரோ மற்றும் ஓப்போ F15 ஆகியவை இந்தியாவில் நிரந்தர விலைக் குறைப்பைப் பெற்றுள்ளன. ஓப்போ A12 போனின் 3 ஜிபி ரேம் மாடல் ரூ.9,990 விலையில் விற்பனைச் செய்யப்பட்டது. இது ரூ.1,000 விலை குறைப்புக்கு பிறகு இப்போது இ-காமர்ஸ் தளங்கள் வழியாக ரூ.8,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சாதனம் கருப்பு மற்றும் நீல வண்ண விருப்பங்களில் வருகிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளமைவைக் கொண்ட ஓப்போ ரெனோ 3 ப்ரோவின் அடிப்படை மாடல் ரூ.3,000 விலைக் குறைந்துள்ளது. இது இப்போது ரூ.27,990 க்கு பதிலாக ரூ.24,990 விலையில் விற்பனையாகிறது. 

ஹை-எண்ட் மாடல் ரூ.2,000 விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது. இது 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் வருகிறது. இது இப்போது ரூ.27,990 விலையில் கிடைக்கிறது. அரோரல் ப்ளூ, ஸ்கை ஒயிட் மற்றும் மிட்நைட் பிளாக் வண்ண விருப்பங்களிலிருந்து நீங்கள் இதை பெற  முடியும்.

கடைசியாக, இந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் மீண்டும் அறிவிக்கப்பட்ட ஓப்போ F17 போனும் ரூ.1,000 விலைக் குறைந்துள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு ரூ.17,990 விலையில் விற்பனையாகி வந்தது. விலைக் குறைப்பைத் தொடர்ந்து, இதை நாட்டில் ரூ.16,990 விலைக்குப் பெற முடியும். அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் ஸ்டோர்களிலும் இந்த விலைக் குறைப்பு பொருந்தும் என்பது குறிப்பிடத் தக்கது.

Views: - 24

0

0