Ticwatch E3 இந்தியாவில் அறிமுகம் | என்னென்ன அம்சமெல்லாம் இருக்குன்னு தெரிஞ்சிக்கணுமா?

18 June 2021, 8:08 am
TicWatch E3 launched in India for Rs 19,999 with Snapdragon Wear 4100 SoC and Google Wear OS
Quick Share

Mobvoi Ticwatch E3 இந்தியாவில் ரூ.19,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் குவால்காம் ஸ்னாப்டிராகன் Wear 4100 SoC உடன் இயக்கப்படுகிறது மற்றும் இது கூகிளின் Wear OS ஐ அடிப்படையாகக் கொண்டது.

டிக்வாட்ச் E3 mobvoi இணையதளத்தில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இது ஒரே ஒரு பாந்தர் பிளாக் வண்ண விருப்பத்துடன் கருப்பு, நீளம் மற்றும் மஞ்சள் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் ஸ்ட்ராப்களுடன் கிடைக்கிறது.

டிக்வாட்ச் E3 விவரக்குறிப்புகள்

டிக்வாட்ச் E3 ஸ்மார்ட்வாட்ச் ஒரு வட்ட டயல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் இது 1.3 அங்குல LCD டிஸ்ப்ளே 360 x 360 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 2.5d வளைந்த கண்ணாடி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நெகிழ்வான சிலிகான் ரப்பர் வாட்ச் ஸ்ட்ராப் ஆனது நீடித்த லைஃப், சௌகரியம் மற்றும் ஸ்டைலான தோற்றத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒரு ஸ்னாப்டிராகன் வேர் 4100 SoC உடன் இயக்கப்படுகிறது, இது 1 ஜிபி RAM மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்பிற்காக, ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் 5.0 ஆதரவைக் கொண்டுள்ளது மற்றும் iOS மற்றும் Android உடன் இணக்கமானது. ஸ்கேட்டிங், நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், ரோயிங், யோகா, மலை ஏறுதல், மற்றும் முக்கிய பந்து விளையாட்டு உள்ளிட்ட 20 ஒர்க்அவுட் முறைகள் உள்ளன. டிக் மோஷன் (TicMotion) உள்ளது, இது உங்கள் வொர்க்அவுட்டை தானாகக் கண்டறிந்து, உங்கள் செயல்பாட்டைக் கண்காணிக்கும் மற்றும் இதய துடிப்பு, கலோரிகள் மற்றும் Vo2 max உள்ளிட்ட உடற்பயிற்சி மற்றும் சுகாதாரத் தரவைப் பதிவு செய்கிறது.

டிக்வாட்ச் E3 24/7 இதய துடிப்பு மானிட்டர் மற்றும் நாள் முழுவதும் இரத்த ஆக்ஸிஜன் செறிவு கண்காணிப்புக்கு இரத்த ஆக்ஸிஜன் சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. டிக்வாட்ச் E3 இல் உள்ள இரத்த ஆக்ஸிஜன் சென்சார் நான்கு செட் அகச்சிவப்பு LED லைட் கிளஸ்டர்களைக் கொண்டுள்ளது மற்றும் உங்கள் மணிக்கட்டின் இரத்த நாளங்களில் ஒளியைப் பிரகாசிப்பதன் மூலம் உங்கள் SpO2 அளவை அளவிடுகிறது. பகல் மற்றும் இரவு முழுவதும் உங்கள் இரத்த ஆக்ஸிஜன் அளவை சீரான இடைவெளியில் தானாகவே கண்காணிக்கவும் பதிவு செய்யவும் 24 மணிநேர கண்காணிப்பை இயக்கவும் மற்றும் சுகாதார அபாயங்களை விரைவாக முன்னிலைப்படுத்தவும் செய்கிறது.

தூக்க கண்காணிப்புக்கு TicSleep, மன அழுத்த கண்காணிப்புக்கு TicGen மற்றும் சுவாச பயிற்சிகளுக்கு TicBreath ஆகியவை உள்ளது. TicCare மூலம் இதய துடிப்பு, நடை எண்ணிக்கை, தூக்க கண்காணிப்பு போன்ற உங்கள் அன்புக்குரியவரின் அணியக்கூடிய தரவையும் தொலைவிலிருந்து கண்காணிக்க முடியும். இந்த கடிகாரத்தில் இணைப்புக்காக வைஃபை 802.11 b /g /n உடன் வழிசெலுத்தலுக்கான GPS, GLONASS மற்றும் பீடோ ஆகியவையும் உள்ளன.

இந்த கடிகாரம் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்காக IP 68 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இதனுடன் 1.5 மீட்டர் வரை நீச்சலுக்கு பயன்படுத்தலாம். இது 380 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இயல்பாக, ஆற்றல் சதவீதம் 5 சதவீதத்திற்கும் குறையும் போது அத்தியாவசிய பயன்முறை (Essential Mode) தானாகவே துவங்கும். 

டிக்வாட்ச் E3 Google Pay உடன் பணம் செலுத்துவதற்கு NFC வசதியுடன் வருகிறது. இது அழைப்பு மற்றும் செய்தி அறிவிப்புகளுடன் வருகிறது. கூகிள் உதவியாளரைப் பயன்படுத்தி மக்கள் தங்கள் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களையும் கட்டுப்படுத்தலாம். இது 44x47x12.6 மிமீ அளவுகளையும் மற்றும் சுமார் 32 கிராம் எடையையும் கொண்டது.

Views: - 183

0

0