10 நாள் பேட்டரிலைஃப் கொண்ட டிக்வாட்ச் GTX ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் | இதன் விலை, விற்பனை விவரங்கள் & விவரக்குறிப்புகள் இங்கே

21 August 2020, 5:47 pm
TicWatch GTX Smartwatch launched in India with a 10-day battery life
Quick Share

மொப்வோய் (Mobvoi) தனது ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் ஒரு புதிய சாதனத்தைச் சேர்த்துள்ளது அது வேறொன்றுமில்லை டிக்வாட்ச் GTX தான். டிக்வாட்ச் GTX ஸ்மார்ட்வாட்சின் விலை ரூ .5,669 மற்றும் ஒற்றை கருப்பு வண்ண மாறுபாட்டில் வருகிறது. மொப்வோயின் வலைத்தளத்தின்படி, ஸ்மார்ட்வாட்ச் தற்போது உண்மையான சில்லறை விலையான ரூ.6,299 யிலிருந்து 10 சதவீதம் தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த அணியக்கூடிய சாதனம் இப்போது நிறுவனத்தின் வலைத்தளத்தின் வழியே முன்கூட்டிய ஆர்டர்களுக்கும் கிடைக்கிறது, இது செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் Mobvoi.com தளத்தில் இருந்து விற்பனைக்கு வரும்.

டிக்வாட்ச் GTX ஸ்மார்ட்வாட்சில் 1.28 இன்ச் LCD கலர் டச் டிஸ்ப்ளே 240 x 240 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. ஸ்மார்ட்வாட்ச் 160 Kb ரேம் மற்றும் 16 MB ROM உடன் இணைக்கப்பட்ட RLC8762C செயலி உடன் இயக்கப்படுகிறது.

இணைப்பிற்காக, ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் 5.0 LE  வசதியைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் iOS மற்றும் ஆன்ட்ராய்டு உடன் இணக்கமானது. வெளிப்புற ஓட்டம், வெளிப்புற சைக்கிள் ஓட்டுதல், ஜம்ப் ரோப், நீச்சல், உட்புற நடைபயிற்சி, ரோயிங், ஃப்ரீ ஸ்டைல், மலை ஏறுதல், உட்புற ஓட்டம், ஜிம்னாஸ்டிக்ஸ், சாக்கர், கூடைப்பந்து, உட்புற சைக்கிள் ஓட்டுதல் மற்றும் யோகா உள்ளிட்ட 14 ஒர்க்அவுட் மோட்களைக் கொண்டுள்ளது.

டிக்வாட்ச் GTX 24 மணிநேர இதய துடிப்பு கண்காணிப்பு, தானியங்கி செயல்பாட்டு பதிவு (நடை எண்ணிக்கை மற்றும் தூர கண்காணிப்பு) மற்றும் தூக்க கண்காணிப்பு திறன்களுக்கான PPG இதய துடிப்பு சென்சாருடன் வருகிறது. இது 1.5 மீட்டர் வரை IP68 உடன் நீர் மற்றும் தூசி எதிர்ப்பு திறன் கொண்டது. ஸ்மார்ட்வாட்ச் 200 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது வழக்கமான பயன்பாட்டுடன் 7 நாட்கள் வரையும், பவர் சேவிங் பயன்முறையில் 10 நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்குகிறது.

டிக்வாட்ச் GTX சாதனத்தை இரண்டு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். நேரத்தைச் சரிபார்க்க உங்கள் கையை நகர்த்தும்போது, ​​திரை ஒளிரச் செய்து அழைப்பு மற்றும் செய்தி அறிவிப்புகள் காண்பிப்பதற்கு ஏற்ற tilt-to-wake ஆதரவுடன் இந்த சாதனம் வருகிறது. ஸ்மார்ட்வாட்ச் 48.7×11 மிமீ அளவுகளைக் கொண்டுள்ளது.

Views: - 49

0

0