2ஜி இல்லா இந்தியாவை உருவாக்க நேரம் வந்துவிட்டது | முகேஷ் அம்பானி அதிரடி | அரசாங்கத்திடம் கோரிக்கை

31 July 2020, 9:18 pm
Time has come to create 2G free India, the government should take steps soon Mukesh Ambani
Quick Share

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இன்று, நாட்டில் முதல் மொபைல் அழைப்பை அறிமுகப்படுத்தியதை நினைவுகூரும் சந்தர்ப்பத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, செல்லுலார் ஆபரேட்டர்கள் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (COAI) ஏற்பாடு செய்த மெய்நிகர் நிகழ்வில் 2 ஜி இல்லா இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பேசினார். 2ஜி மொபைல் சேவை விடைபெறும் நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்தார்.

உலகமே 5ஜி வாசலில் நிற்கும்போது, இந்தியாவில் இன்னும் 300 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் 2ஜி நெட்வொர்க்கில் 2ஜி அம்ச தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர் என்று அவர் கூறினார். இந்த பிரச்சினையில் தேவையான கொள்கை நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். 

ஊரடங்குக்கு மத்தியில், மொபைல் வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாக உருவெடுத்துள்ளது, மேலும் மக்களை மேம்படுத்தும் ஊடகமாக மாறியுள்ளது என்று அம்பானி கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் “ஈஸி ஆஃப் லிவிங்” (Ease of Living) கனவைப் பற்றி குறிப்பிட்ட அம்பானி, டிஜிட்டல் மொபிலிட்டி இந்த கனவை நனவாக்குகிறது என்று கூறினார். பிரதமரின் டிஜிட்டல் இந்தியா மிஷனின் முன்னேற்றத்திற்கு ஜியோ தனது முழு பங்களிப்பை வழங்க உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.

டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஜியோவின் பங்களிப்பு குறித்து பேசிய அம்பானி, “நம் கோடிக்கணக்கான விவசாயிகள், சிறு வணிகர்கள், நுகர்வோர், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு டிஜிட்டல் தளம் ஒரு மேம்பட்ட தளத்தை வழங்கும்” என்றார். இது நம் திறமையான இளைஞர்களுக்கு புதிய மற்றும் கவர்ச்சிகரமான வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்கும்.

சமீபத்தில், உலகின் 13 புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் ஜியோ இயங்குதளங்களில் முதலீடு செய்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது. ஜியோ அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நான்கு ஆண்டுகளில் 40 கோடி சந்தாதாரர்களைச் சேர்த்தது. இந்த சாதனை குறித்து, நான்கு ஆண்டுகளில், டிஜிட்டல் புரட்சியின் பலன்களை மொபைல் நுகர்வோருக்கு வழங்கியுள்ளோம் என்றும் அம்பானி கூறினார்.

Leave a Reply