இந்த டைட்டன் வாட்ச் நேரம் பார்க்க மட்டும் இல்லை..! இந்தியாவில் முதன்முதலில் இப்படி ஒரு அம்சத்துடன் வரும் வாட்ச் இதுதான்!
17 September 2020, 9:37 amதொற்றுநோய் மற்றும் சமூக இடைவெளியை மையமாகக் கொண்டு, வாட்ச் தயாரிப்பாளர் ஆன டைட்டன் இந்தியாவில் ஐந்து புதிய வாட்ச் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை ஸ்மார்ட்வாட்ச்கள் அல்ல, ஆனால் ஒரு ‘ஸ்மார்ட்’ அம்சத்துடன் வருகின்றன அதுதான் contactless payment எனப்படும் தொடர்பு இல்லாத கட்டணம்.
இதைச் செய்ய நிறுவனம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அனைத்து பயனர்களும் செய்ய வேண்டியது எல்லாம் தொடர்பு இல்லாத கட்டண சேவைக்கு POS இயந்திரங்களுடன் டைட்டன் கடிகாரத்தைத் தட்டினால் போதும். பண பரிவர்த்தனை தானாக நடைபெறும்.
டைட்டன் எஸ்பிஐ வங்கி உடன் பிணைக்கப்பட்டுள்ளதால், இது எஸ்பிஐ வங்கி கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே செயல்படும். ஒரு பரிவர்த்தனையில், அதிகபட்சமாக ரூ.2,000 வரை பணம் செலுத்தலாம். இருப்பினும், ரூ.2,000 க்கும் அதிகமான தொகையை நீங்கள் செலுத்துவதற்கு PIN ஐ கைமுறையாக வழங்க வேண்டும்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இந்த கடிகாரங்கள் ஐந்து வெவ்வேறு பதிப்புகளில் வருகின்றன. அவற்றில் இரண்டு ஆண்களுக்கானவை. அவை ரூ.2,995, ரூ.3,995 மற்றும் ரூ.5,995 விலைகளில் வருகின்றன. மற்ற இரண்டும் பெண்களுக்கானவை அவை ரூ.3,895 மற்றும் ரூ.4,395 விலைகளில் வருகின்றன. இந்த வாட்ச் கிளாசிக் பிளாக் மற்றும் பிரவுன் லெதர் ஸ்ட்ராப்களுடன் வட்ட டயல்களுடன் வருகிறது. விலை உயர்ந்த தங்க பூச்சுடன், பிரத்யேக கட்டண பொத்தான்கள் மற்றும் நாள் மற்றும் தேதிக்கான கூடுதல் டயல்களையும் கொண்டிருக்கும்.
வாட்ச் ஸ்ட்ராப்பிற்குள் ஒரு நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன் (NFC) சிப் வைக்கப்பட்டுள்ளதால் இந்த வாட்ச் மூலம் பரிவர்த்தனை நடைபெறுகிறது.
இந்த தொடர்பு இல்லாத கட்டண கடிகாரங்களின் வெளியீடு ஆப்பிள் தனது பிரீமியம் வாட்ச் சீரிஸ் 6 மற்றும் குறைந்த விலையிலான வாட்ச் SE சாதனங்களை வெளியிட்ட ஒரு நாளுக்குப் பிறகு வருகிறது.
இரத்த ஆக்ஸிஜன் கண்டறிதல் அம்சம், ஆல்வேஸ் ஆன்-ஆல்டிமீட்டர், S6 SiP போன்றவை மற்றும் வாட்ச்ஓஎஸ் 7 ஆகியவற்றைக் கொண்டு அனுப்பப் போகும் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 க்கு, ஜிபிஎஸ் மாடலுக்கான விலை ரூ.40,900 முதல் தொடங்குகிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 (ஜி.பி.எஸ் + செல்லுலார்) ரூ.49,900 விலையைக் கொண்டுள்ளது.
ஆப்பிள் வாட்ச் SE (ஜி.பி.எஸ்) ரூ.29,900 ஆகவும், ஆப்பிள் வாட்ச் SE (ஜி.பி.எஸ் + செல்லுலார்) ரூ.33,900 ஆகவும் விலைகளை கொண்டுள்ளது.
0
0