டொயோட்டா லேண்ட் குரூசரின் 70 வது ஆண்டுவிழா எஸ்யூவி பதிப்பு அறிமுகம் | விலை & விவரங்கள் இங்கே

Author: Hemalatha Ramkumar
7 August 2021, 4:21 pm
Toyota Land Cruiser 70th Anniversary edition SUV launched
Quick Share

ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா தனது லேண்ட் குரூசர் 70வது ஆண்டுவிழா பதிப்பை ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 600 யூனிட்கள் மட்டுமே வாங்க கிடைக்கும்.

இந்த வாகனம் லேண்ட் குரூசர் 70 சீரிஸின் டாப்-ஸ்பெக் GXL வேரியண்ட்டை அடிப்படையாகக் கொண்டது மற்றும் ரெட்ரோ-ஸ்டைல் தோற்றத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு உயர்தர கேபினையும் கொண்டுள்ளது மற்றும் 4.5 லிட்டர் டர்போ-டீசல் V8 இன்ஜின் உடன் இயக்கப்படுகிறது.

லேண்ட் க்ரூஸர் 70 வது ஆண்டுவிழா பதிப்பில் திடமான ஹூட், கருப்பு நிற கிரில், அதில் ‘டொயோட்டா’ எழுத்துக்கள், வட்ட ஹெட்லைட்கள் மற்றும் LED ஃபாக் லைட்கள் மற்றும் DRL ஆகியவை உள்ளன.

இது சதுர ஜன்னல்கள், ORVM கள், பக்கங்களில் ஸ்டெப்பர்கள், கருப்பு நிறத்திலான ஃபெண்டர்ஸ் மற்றும் அடர் நிற 16 அங்குல சக்கரங்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும்.

இந்த கார் பிரெஞ்சு வெண்ணிலா, சாண்டி டூப் மற்றும் மெர்லோட் ரெட் ஆகிய மூன்று நிழல்களில் கிடைக்கும்.

லேண்ட் குரூசர் 70 வது ஆண்டுவிழா பதிப்பு 4.5 லிட்டர் டர்போ-டீசல் V8 இன்ஜினிலிருந்து 203 bhp பவரையும், 430 Nm உச்ச திருப்பு விசையையும் உருவாக்குகிறது. இந்த 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புறத்தில் டிஃபிரென்ஷியல் பூட்டுகளும் வழங்கப்படுகின்றன.

லேண்ட் குரூசர் 70 வது ஆண்டுவிழா பதிப்பில் கருப்பு நிற அப்ஹோல்ஸ்டரி, AC வென்ட்களைச் சுற்றி வெள்ளி நிற கோட்டிங், ஒரு ஜோடி USB போர்ட்கள், சென்டர் கன்சோலில் ரெட்ரோ லேண்ட் க்ரூஸர் லோகோ, டேஷ்போர்டு மற்றும் ஒரு 3 ஸ்போக் ஸ்டீயரிங் ஆகியவற்றை கொண்டுள்ளது.

ஒரு அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் கன்சோலும் வழங்கப்படுகிறது. பல ஏர்பேக்குகள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

இந்த லேண்ட் குரூசரின் 70 வது ஆண்டுவிழா பதிப்பின் வேகன் மாடல் 80 யூனிட்டுகள் மட்டுமே தயார் செய்யப்படும் மற்றும் இதன் விலை AUD 78,500 (ரூ.43 லட்சம்) ஆகும். சிங்கிள் கேப் ட்ரக்ஸ் (200 அலகுகள்) மற்றும் டபுள்-கேப் பிக்அப்ஸ் (320 அலகுகள்) முறையே AUD 80,050 (ரூ. 44 லட்சம்) மற்றும் AUD 82,600 (ரூ. 45.3 லட்சம்) விலைகளில் விற்பனை செய்யப்படும்.

Views: - 573

0

0