ANC நுட்பம் பாட்டு கேக்கத்தானா? ANC மூலம் ரொமான்ஸ் செய்யும் தவளைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு?

6 March 2021, 1:43 pm
Tree frog has LUNGS which 'act like noise cancelling headphones'
Quick Share

இப்போதெல்லாம் புதிதாக அறிமுகமாகும் இயர்போன்ஸ், இயர்பட்ஸ், ஹெட்பொன்ஸ் எல்லாம் ANC தொழில்நுட்பத்துடன் தான் அறிமுகமாகின்றன. முதலில் இந்த நுட்பம் பிரபலமானது ஏர்பாட்ஸ் மூலம் தான். இந்த  ANC எனும் Active Noise Cancellation எனும் நுட்பத்தின் மூலம் நீங்கள் பின்னணியில் கேட்கும் இரைச்சல் சப்தங்கள் அல்லது வெளிப்புற சப்தங்கள் இன்றி அழைப்பின் போதும் பேச்சையும், பாடல்களையும் கேட்க முடியும்.

இப்போது சில காலமாக மொபைல் சாதனங்களினால் இந்த நுட்பம் பிரபலமாகவும் தான் நமக்கு இந்த ANC பற்றியே தெரிகிறது. என்னதான் இந்த ANC எனும் நுட்பம் செயற்கையானதாக இருந்தாலும், இயற்கை தான் என்றுமே எதற்குமே தொடக்க புள்ளி என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது. 

அட அதெப்படி இந்த நுட்பம் இயற்கையில் இருக்கு என்று கேட்கிறீர்களா? பார்க்கலாம் வாங்க. இப்போது ஒரு புதிய ஆராய்ச்சியில் ஒரு வகையான மரத்தவளைகள் தங்கள் துணை எழுப்பும் ஒலியை சரியாக கண்டறிய இது போன்ற ஒரு திறனை பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

Tree frog has LUNGS which 'act like noise cancelling headphones'

காதலில் மூழ்கிவிட்டால் உனது குரலைத் தவிர வேறு எதுவும் என் காதில் விழாது என்று மனிதர்கள் வசனம் பேசினாலும், இந்த மரத்தவளைகளின் ரொமான்ஸ் விஷயத்தில் அது உண்மைதான் என்று நிரூபணம் ஆகிவிட்டது. ஆமாங்க Headphone-ல் இருக்கும் ANC அம்சம் செயல்படுவதுபோல் செயல்படுகிறது இந்த தவளையின் நுரையீரல்.

காதலுடன் தன் இன தவளைகள் கத்தும் சத்தத்தை மட்டும் கேட்க இந்த மரத்தவளை அதன் நுரையீரலைப் பெரிதாக்குகிறது. அது போன்று நுரையீரலைப் பெரிதாக்கும்போது இது பின்னணி இரைச்சலைத் தவிர்த்து தன் இன தவளையின் சத்தத்தை மட்டும் கேட்கும் என்று ஆராச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Tree frog has LUNGS which 'act like noise cancelling headphones'

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஹைலா சினீரியா எனும் அமெரிக்க பச்சை மரத் தவளைகள் இது போன்ற திறனை இயற்கையாக கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

இயற்கையாகவே தங்களில் உள்ள திறனுடன் நீர்வீழ்ச்சியின் சப்தம் மற்ற தவளைகள் மற்றும் உயிரினங்களின் சத்தத்தை எல்லாம் தவிர்த்துவிட்டு ஜாலியாக ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கின்றன இந்த பச்சை மரத்தவளைகள். உண்மையாவே இயற்கையும் அதன் படைப்புகளும் வேற லெவல் தாங்க.

Views: - 2

0

0