இந்தியாவில் புதிய Truimph Trident 660 பைக் அறிமுகம்! விலை & விவரங்கள் இதோ

6 April 2021, 1:18 pm
Triumph Trident 660 launched in India
Quick Share

Truimph மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை இந்திய சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Trident 660 மிடில்வெயிட் ரோட்ஸ்டர் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. கவாசாகி Z650 பைக்கிற்கு போட்டியாக அறிமுகம் ஆகியுள்ள இந்த பைக்கின் விலை ரூ.6.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஆகும். இந்த விலைக் குறியீட்டில், Trident 660 நிறுவனத்தின் மிகவும் மலிவான பைக்காக வெளியாகியுள்ளது.

டிரையம்ப் நிறுவன தரப்பிலிருந்து இருந்து புதிய மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே ஆரம்பமாகி உள்ளன, மேலும் டெலிவரிகளும் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் 16,000 கி.மீ சேவை இடைவெளியுடன் / இரண்டு ஆண்டு, வரம்பற்ற கிலோமீட்டர் மைலேஜ் உத்தரவாதத்துடன் Trident பைக்கை வழங்குகிறது.

Trident தினசரி எளிதான சவாரிக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. செயல்திறன், எளிமையான சவாரி மற்றும் துல்லியமான கையாளுதல் போன்ற அம்சங்களைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன் வளர்ச்சி இங்கிலாந்தின் ஹின்க்லியில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய டைகர் 900 க்குப் பின்னால் உள்ள மோட்டார் சைக்கிள் வடிவமைப்பாளரான ட்ரையம்பின் ரோடால்போ ஃப்ராஸ்கோலியின் ஸ்டைலிங் உள்ளீடுகளைப் பயன்படுத்தி இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 2

0

0