சுவரில் இனி ஆணி அடிக்க வேண்டாம்! துபாயில் இந்திய மாணவன் அசத்தல் கண்டுபிடிப்பு

25 October 2020, 3:34 pm
Dubai-based Indian teen turns school project into family business
Quick Share

ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த ஒரு பதினாறு வயது இந்திய சிறுவன், School Assignment இன் ஒரு பகுதியாக, சுவரில் துளை ஏதும் போடாமலே  சற்று அதிக எடையுள்ள பொருட்களையும் கூட தொங்கவிடும் வகையில் புதுமையான கண்டுபிடிப்பை கண்டறிந்துள்ளார். இதை சாதாரணாமாக தனது பள்ளி பணியாக செய்த இந்த மாணவர் இப்போது இதை வணிக ரீதியாக பெரிய அளவில் மாற்றவும் முயற்சி செய்து வருவதாக ஒரு ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

துபாயில் உள்ள ஜெம்ஸ் வேர்ல்ட் அகாடமியைச் சேர்ந்தவர் தான் மாணவர் இஷிர். இவர் தனது கிரேட் 10 (Grade 10) இன்டர்நேஷனல் பேக்கலரேட் (IB) கோர்ஸுக்காக ஒரு புதுமையான Project ஐ சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் தான், ஆணியால் துளையிடும்போது சுவர்கள் சேதமடைவதை தவிர்க்க வேண்டும் என்ற யோசனை அவருக்கு தோன்றியுள்ளது. 

ஸ்க்ரூ மற்றும் ஆணிகள் பழங்காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்தபோதிலும், அவை சுவர்களுக்கு சேதம் விளைவிக்கின்றன, மேலும் துளையிடுவதற்கென ஒருத்தரை தேட வேண்டி இருக்கிறது, அத்துடன் தூசி மாசுபாடு போன்றவை மக்களுக்கு சிக்கலாக உள்ளன என்று கூறியதோடு இதையெல்லாம் மாற்றுவதற்கான தீர்வையும் கண்டுபிடிக்க விரும்புவதாகவும் இஷீர் தெரிவித்தார். 

இந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து இஷீருக்கு ஒரு யோசனை இருந்தபோதிலும், மேலதிக வழிகாட்டுதலுக்காக அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழகத்தில் பயின்று  வரும் பொறியியல் மாணவர் ஆன தனது அண்ணன் அவிக் இடமும் ஆலோசனையைப் . பெற்றுக்கொண்டார்.

இந்த கண்டுபிடிப்பில் இரண்டு ஸ்டீல் டேப்கள் மற்றும் ஒரு வலுவான காந்தம் ஆகியவை உள்ளது. இது முழு கட்டமைப்பையும் ஒன்றாக தாங்கிக்கொள்கிறது.

“சுவருடன் ஒட்டப்படும் ஸ்டீல் டேப் ‘ஆல்பா ஸ்டீல் டேப்’ என்றும், பொருளில் உள்ளது  ‘பீட்டா ஸ்டீல் டேப்’ என்றும் அழைக்கப்படுகிறது.

இதிலிருக்கும் நியோடைமியம் காந்தம் ஆனது வைக்கப்படும் பொருள் உட்பட முழு கட்டமைப்பையும் தாங்கி பிடித்திருக்கும். 

எடையுள்ள பொருட்களை சுவரில் தொங்கவிட பயன்படும் இந்த முறையில் இரண்டு காந்தங்கள் ஒட்டிக்கொள்ளும் போது உருவாகும் ‘கிளாப்’ ஒலியின் அடிப்படையில் இதற்கு ‘KLAPiT’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

மாணவன் இஷீரின் தந்தை சுமேஷ் அவர்கள், இப்போது தனது வேலையை விட்டுவிட்டு, ‘KLAPiT’ தயாரிப்பையே தனது குடும்ப வணிகமாக பெரிய அளவில் தொடங்கவும் முடிவு செய்துள்ளார்.

Views: - 49

0

0