டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் விலைகள் உயர்வு!

12 April 2021, 9:01 pm
TVS Apache RTR 200 4V and Apache 160 4V prices hiked
Quick Share

டி.வி.எஸ் அப்பாச்சி RTR 200 4V மற்றும் அப்பாச்சி RTR 160 4V ஆகிய பைக் மாடல்கள் விலை உயர்வு பெற்றுள்ளன.

முன்னதாக, அப்பாச்சி RTR 200 4V இன் ஒற்றை சேனல் ABS பதிப்பு ரூ.1,28,020 ஆக இருந்தது. இப்போது ரூ.1,295 விலை உயர்வுடன், மோட்டார் சைக்கிளின் விலை ரூ.1,29,315 ஆக உயர்ந்துள்ளது. இரட்டை-சேனல் ABS பதிப்பும் கூட அதே போன்று ரூ.1,295 விலை உயர்வைப் பெற்றுள்ளது. முன்னதாக ரூ.1,33,070 விலைக் கொண்டிருந்த இந்த மாடல் இப்போது ரூ.1,34,365 விலையில் கிடைக்கிறது.

இதற்கிடையில், டி.வி.எஸ் அப்பாச்சி RTR 160 4V அதன் டிரம் மற்றும் டிஸ்க் வகைகளுக்கு ரூ.45 விலை உயர்வு பெற்றுள்ளது. இப்போது இந்த பைக் மாடல்களின் விலை முறையே ரூ.1,07,315 மற்றும் ரூ.1,10,365 ஆக உள்ளது. ஆனால், விலைகள் அதிகரித்த போதிலும், டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V மற்றும் அப்பாச்சி RTR 160 4V ஆகியவை எந்தவித புதிய மாற்றங்களும் இல்லாமல் அப்படியே இருக்கின்றன. 

பஜாஜ் பல்சர் NS 200 மற்றும் பஜாஜ் பல்சர் NS 160 ஆகியவற்றுக்கு போட்டியாக இந்த டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V இருக்கிறது. 

குறிப்பு: மேற்சொன்ன அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைகள் என்பதை நினைவில் கொள்க

Views: - 82

0

0