ஒரு நாளுக்கு ரூ.49 செலுத்தினாலே போதும்.. TVS XL 100 உங்களுக்கு சொந்தம்! விவரங்கள் இங்கே

14 June 2021, 8:40 pm
TVS rolls out "Rs 49 a day" scheme for the XL100
Quick Share

டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம், டி.வி.எஸ் XL 100 என்ற பல பயன்பாட்டு வாகனத்திற்கான பைனான்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது டிவிஎஸ் XL 100 i-டச்ஸ்டார்ட் மாடலை வாங்க விரும்புபவர்கள் ஒரு நாளைக்கு 49 ரூபாய் செலுத்தும் திட்டத்தின் மூலம் இதை சொந்தமாக்கிக்கொள்ள முடியும். இந்த திட்டத்தின் மூலம், அதாவது ரூ. 49 x 30 நாட்களுக்கு எனும்போது மாதம் 1,470 ரூபாய் EMI ஆக செலுத்தினாலே போதும். மாதாந்திர அடிப்படையில் EMI செலுத்தினாலே போதும்.

இதற்காக டிவிஎஸ் நிறுவனம் டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், L&T மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி போன்ற நிதியாளர்களுடன் கூட்டணி அமைத்துள்ளது. நான்கு வெவ்வேறு காலஅளவுகளில் EMI திட்டங்கள் கிடைக்கிறது. டி.வி.எஸ் XL 100 வாடிக்கையாளர்கள் மிகவும் குறைந்த லோ டவுன் பேமென்ட் அதாவது முதல் தவணையாக ரூ.7,999 செலுத்த வேண்டியிருக்கும் மற்றும் இதற்கான வட்டி விகிதம் ரூ.7.99%  ஆகும்.

பல ஆண்டுகளாக, டி.வி.எஸ் XL 100 இன் வலுவான கட்டமைக்கப்பட்ட, பல பயன்பாட்டு திறன் மற்றும் குறைந்த விலை போன்ற காரணங்களால் வணிக உரிமையாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்ற சிறந்த இரு சக்கர வாகனமாக மாறியுள்ளது. எளிதான ஆன்-ஆஃப் சுவிட்ச், யூ.எஸ்.பி சார்ஜர் மற்றும் வசதியான சவாரி அனுபவம் போன்ற பயனர் இணக்கமான அம்சங்களால் இந்த வாகனம் அலுவலகம் செல்வோர், பெண்கள் ரைடர்ஸ் மற்றும் வயதானோரிடம் இருந்து நல்ல வரவேற்பைக் கண்டுள்ளது.

டி.வி.எஸ் XL 100 ஈகோ த்ரஸ்ட் எரிபொருள் உட்செலுத்துதல் (ET-Fi) தொழில்நுட்பத்துடன் வருகிறது, இது 15% அதிக மைலேஜ் மற்றும் ஒருங்கிணைந்த மற்றும் அமைதியான தொடக்கத்தை செயல்படுத்தும் ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டர் (ISG) அமைப்பைக் கொண்டுள்ளது. இது 99.7 சிசி நான்கு-ஸ்ட்ரோக் இன்ஜின் உடன் அதிகபட்சமாக 3.20 கிலோவாட் (4.3 bhp) @ 6000 rpm மற்றும் அதிகபட்சம் 6.5 Nm முறையை 3500 rpm இல் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

டி.வி.எஸ் XL 100 ஐந்து வகைகளில் கிடைக்கிறது: 

  • டிவிஎஸ் XL 100 ஹெவி டியூட்டி கிக்ஸ்டார்ட், 
  • டிவிஎஸ் XL 100 ஹெவி டியூட்டி i-டச்ஸ்டார்ட், 
  • டிவிஎஸ் XL 100 ஹெவி டியூட்டி i-டச்ஸ்டார்ட் Win பதிப்பு, 
  • டிவிஎஸ் XL 100 கம்ஃபோர்ட் கிக்ஸ்டார்ட் மற்றும் 
  • டிவிஎஸ் XL 100 கம்ஃபோர்ட் ஐ-டச்ஸ்டார்ட் . 

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டிவிஎஸ் XL 100 ஹெவி டியூட்டி i-டச்ஸ்டார்ட் Win பதிப்பு டிலைட் ப்ளூ மற்றும் பீவர் பிரவுன் வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

Views: - 483

0

1