டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கின் விலைகள் உயர்வு!

15 April 2021, 12:50 pm
TVS Star City Plus prices marginally increased
Quick Share

டி.வி.எஸ் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் 110 சிசி பிரிவில் கிடைக்கும் தனது ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கின் விலைகளை உயர்த்தியுள்ளது. இது ஒரு டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் வேரியண்ட்டில் கிடைக்கிறது, இவை இரண்டும் ரூ.1,000 விலை உயர்வு பெற்றுள்ளன. 

இப்போது, ​​ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கின் டிரம் பிரேக் மாடலின் விலை ரூ.66,865 ஆகவும், முன் பக்கத்தில் டிஸ்க் பிரேக் கொண்ட மாடலின் விலை ரூ.69,465 ஆகவும் (இரண்டு விலைகளும் எக்ஸ்ஷோரூம், டெல்லி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டி.வி.எஸ் நிறுவனம் கடந்த ஆண்டை விட பல நுட்பமான புதுப்பிப்புகளுடன் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கின் புதிய மாடலை வழங்குகிறது. பிஎஸ் 6 உமிழ்வு விதிமுறைகளுக்கு கட்டாயமாக மாற வேண்டியதை அடுத்து செய்யப்பட்ட திருத்தங்களைத் தவிர, சிறிய ஸ்டைலிங் மற்றும் அம்ச புதுப்பிப்புகளையும் இந்த பைக் பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் ஒரு முன் டிஸ்க் பிரேக் மாடலும் மற்றும் புதிய பியர்ல் ப்ளூ-சில்வர் வண்ண விருப்பத்திலான பைக்கும் சேர்க்கப்பட்டது.

ஸ்டார் சிட்டி பிளஸில் கிடைக்கும் அம்சங்களில் முழு LED ஹெட்லேம்ப், அரை டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் யூ.எஸ்.பி மொபைல் சார்ஜர் ஆகியவையும் அடங்கும். 

கடந்த ஆண்டு, டி.வி.எஸ் ஐந்து ஸ்டெப்பில் சரிசெய்யக்கூடிய ஷாக் அபசர்பரையும் இணைத்தது. பைக்கை இயக்குவது 109.7 சிசி, ஏர்-கூல்ட் இன்ஜின் ஆகும், இது 8.08 bhp ஆற்றலையும் 8.7 Nm உச்ச திருப்புவிசையையும் உருவாக்கும். இது நான்கு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதன் அம்சங்களைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் 110, பஜாஜ் பிளாட்டினா 110 H-கியர் மற்றும் ஹோண்டா லிவோவுடன் இந்த டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் போட்டியிடும்.

Views: - 50

0

0