இந்தியாவில் மஞ்சள் வெள்ளைனு கலர் கலரா நம்பர் பிளேட்டு இருக்கே… எதுக்கு தெரியுமா?

28 January 2021, 2:04 pm
Types Of Number Plates In India & HSRP Explained updatenews360
Quick Share

மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் படி, இந்திய சாலைகளில் இயங்கும் அனைத்து மோட்டார் வாகனங்களும் ஆர்டிஓவில் பதிவு செய்யப்பட்டு உரிமத் தகடு (License plate) (நம்பர் பிளேட்) வைத்திருக்க வேண்டும். இந்தியாவில் பல்வேறு வகையான நம்பர் பிளேட்டுகள் உள்ளன. பதிவு செய்யப்படாத வாகனங்களைச் சாலைகளில் இயக்கினால் சட்டத்தை மீறும் குற்றத்திற்காக கடும் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

லைசென்ஸ் பிளேட் என்பது மாவட்ட RTO (பிராந்திய போக்குவரத்து அலுவலகம்) இடமிருந்து வழங்கப்படும், மேலும் இது வாகனத்தின் முன்பக்கத்திலும் பின்புறத்திலும் வைக்கப்பட வேண்டும். இந்தியாவுக்கான சர்வதேச பதிவுக் குறியீடு IND என்பதாகும்.

இந்திய நம்பர் பிளேட் – விளக்கப்படம்

  • ஒரு நம்பர் பிளேட்டில் (TN, DL, HR, MH போன்றவை) முதல் இரண்டு எழுத்துக்கள் வாகனம் பதிவுசெய்யப்பட்ட பகுதி அல்லது மாநிலத்தைக் குறிக்கின்றன. எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு RTO வில் பதிவுசெய்யப்பட்ட ஒரு வாகனத்திற்கு TN என்ற எழுத்துக்கள் அச்சிடப்படும்.
  • பின்வரும் இலக்கங்கள் வாகனம் பதிவுசெய்யப்பட்ட மாவட்டத்தைக் குறிக்கின்றன.
  • லைசென்ஸ் பிளேட்டின் மூன்றாவது பகுதி எண்களின் தொகுப்பாகும். இது பொதுவாக நான்கு இலக்கங்களில் இருக்கும். இது ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்துவமானது. சில பேன்சி எண்கள் உடனான நம்பர் பிளேட்டுகள் VIP கார்களைக் குறிக்கின்றன. மேலும் அவற்றை பெற சற்று அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும்.
  • லைசென்ஸ் பிளேட்டில் இருக்கும் IND என்பது இந்தியாவுக்கான சர்வதேச பதிவுக் குறியீடாகும்.
Types Of Number Plates In India & HSRP Explained updatenews360

HSRP எனும் High Security Registration Plate அதாவது உயர் பாதுகாப்பு பதிவு தட்டு என்றால் என்ன தெரியுமா?

மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989 உடன் தொடர்புடைய நம்பர் பிளேட் விதிமுறைகளின்படி, ஏப்ரல் 1, 2019 க்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் HSRP யை கொண்டிருக்க வேண்டும். பழைய நம்பர் பிளேட்டுகளுடன் பதிவு செய்யப்பட்ட பழைய வாகனங்களுக்கும் இது பொருந்தும். 

இந்த சிறப்பு நம்பர் பிளேட்டுகள் அரசாங்கத்தால் மட்டுமே வழங்கப்படுவதால் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் வாகன திருட்டைத் தடுக்க உதவுகின்றன. பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் டிஜிட்டல் தேசிய தரவுத்தளத்தை உருவாக்க HSRP களும் உதவுகின்றன.

உயர் பாதுகாப்பு எண் தகடுகள் என்பது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கட்டாயமாக்கபட்டுள்ளன. இந்த நம்பர் பிளேட்டுகள், IND எனும் இந்தியாவுக்கான சர்வதேச பதிவுக் குறியீடு மற்றும் அசோக சக்ரா ஹாலோகிராமுக்குக் கீழே ஒரு தனித்துவமான லேசர் மூலம் அச்சிடப்பட்ட குறியீட்டைக் கொண்ட அலுமினியத்தால் ஆனது. பதிவு எண் 45 டிகிரி கோணத்தில் பொறிக்கப்பட்ட IND உடன் முத்திரையிடப்பட்டுள்ளது. 

சரி , இப்போ நம்பர் பிளேட்டுகளைப் பற்றி நிறைய தெரிந்துக்கொண்டோம். நாம் சாலைகளில் செல்லும்போது, பல்வேறு வாகனங்களில் பல்வேறு நிறத்தினாலான நம்பர் பிளேட்டுகளைப் பார்த்திருப்போம். அது அவ்ரகளாக கொடுத்துக்கொள்ளும் நிறமுள்ள. அதற்கென்ன பல அர்த்தமுண்டு. அது  என்ன, அதனால் என்ன பலன்…? தெரிஞ்சுக்கலாம் வாங்க.

இந்தியாவில் நம்பர் பிளேட்டுகளின் வகைகள்:

கருப்பு எழுத்துக்களுடன் வெள்ளை நம்பர் பிளேட்டு

Types Of Number Plates In India & HSRP Explained updatenews360

மிகவும் பொதுவான நம்பர் பிளேட் என்றால் அது இது தான். ஏனென்றால், தனிப்பட்ட அல்லது வணிகம் சாராத கார்களுக்கு இந்த நம்பர் பிளேட் வழங்கப்படும். இந்த நம்பர் பிளேட்டைக் கொண்ட வாகனங்களைப் பொருட்கள் போக்குவரத்து, பயணிகளை ஏற்றிச் செல்வது போன்ற வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியாது.

கருப்பு எழுத்துக்களுடன் மஞ்சள் நம்பர் பிளேட்டு

Types Of Number Plates In India & HSRP Explained updatenews360

இவை டாக்ஸி, கேப்ஸ், லாரிகள் போன்ற வணிக வாகனங்களுக்கு வழங்கப்படும். வெள்ளை நம்பர் பிளேட்டுகளுடன் ஒப்பிடும்போது மஞ்சள் நம்பர் பிளேட்டுகள் வேறுபட்ட வரி அமைப்பைக் (Tax Structure) கொண்டுள்ளன, மேலும் மஞ்சள் நம்பர் பிளேட்டுகளைக் கொண்ட வணிக கார் ஓட்டுநர்களும் Commercial driving permit அதாவது வணிக ஓட்டுநர் அனுமதி பெற வேண்டும்.

மஞ்சள் எழுத்துக்களுடன் கருப்பு நம்பர் பிளேட்டு

Types Of Number Plates In India & HSRP Explained updatenews360

வாடகைக்கு அல்லது சுயமாக இயக்கப்படும் வாகனமாக பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கு கருப்பு நம்பர் பிளேட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த வகையான நம்பர் பிளேட்டுகள் ஆடம்பர ஹோட்டல் போக்குவரத்திற்கானதாவும் பிரபலமாக உள்ளன. ஓட்டுநரிடம் வணிக ஓட்டுநர் அனுமதி இல்லாமலும் இந்த நம்பர் பிளேட்டுகளை கொண்ட வாகனங்கள் வணிக வாகனமாக இயக்க முடியும்.

வெள்ளை எழுத்துக்களுடன் பச்சை நம்பர் பிளேட்டு

Types Of Number Plates In India & HSRP Explained updatenews360

இந்த நம்பர் பிளேட் மின்சார கார்களுக்கு மட்டுமே தனித்துவமானது. இது மின்சார பஸ்கள் மற்றும் பிற மின்சார வணிக வாகனங்களுக்கு (மஹிந்திரா e20, டாடா டைகோர் எலக்ட்ரிக் போன்றவற்றுக்கு) பொருந்தும்.

வெள்ளை எழுத்துக்களுடன் சிவப்பு நம்பர் பிளேட்டு

Types Of Number Plates In India & HSRP Explained updatenews360

RTO நிரந்தர பதிவு வழங்கும் வரை சிவப்பு நம்பர் பிளேட் ஒரு புதிய வாகனத்திற்கான தற்காலிக பதிவாக வழங்கப்படுகிறது. தற்காலிக பதிவு 1 மாதத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். இருப்பினும், அனைத்து இந்திய மாநிலங்களும் தற்காலிகமாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களைச் சாலையில் செல்ல அனுமதிப்பதில்லை.

வெள்ளை எழுத்துக்களுடன் நீல நம்பர் பிளேட்டு

Types Of Number Plates In India & HSRP Explained updatenews360

வெளிநாட்டு துணைத் தூதரகங்களைச் சேர்ந்த வாகனங்கள் வெளிர் நீல நிற பின்னணியில் வெள்ளை எழுத்துக்களைக் கொண்டிருக்கும். ஐக்கிய நாடுகள் சபை, இராஜதந்திரப் படைகள் அல்லது தூதரகப் படைகள் ஆகியவற்றுக்குச் சொந்தமான வாகனத்திற்கு வெள்ளை எழுத்துக்களுடன் நீல நிற நம்பர் பிளேட்டுகள் வழங்கப்படுகிறது.

மேல்நோக்கி சுட்டிக்காட்டும் அம்புடனான நம்பர் பிளேட்டு

Types Of Number Plates In India & HSRP Explained updatenews360

இந்த நம்பர் பிளேட்டுகளைத் தாங்கிய வாகனம் புதுடில்லியில் பதிவு செய்யப்பட்ட பாதுகாப்பு அமைச்சகத்தின் இராணுவ வாகனம் ஆகும். இந்த நம்பர் பிளேட்டில் முதல் அல்லது இரண்டாவது எழுத்துக்குறி மேல்நோக்கி சுட்டிக்காட்டும் அம்பைக் கொண்டிருக்கும், இது Broad Arrow என அழைக்கப்படுகிறது. அம்புக்குறியைத் தொடர்ந்து வரும் இலக்கங்கள் வாகனம் வாங்கிய ஆண்டைக் குறிக்கின்றன. அடுத்தது அடிப்படைக் குறியீடு, அதைத் தொடர்ந்து வரிசை எண். வரிசை எண்ணுக்குப் பிறகு முடிவடையும் எழுத்து வாகனத்தின் வகுப்பைக் குறிக்கிறது.

Views: - 0

0

0