இதுதான் அடுத்த சாம்சங் ஸ்மார்ட்போன்! ஆன்லைனில் கசிந்தது புகைப்படம்!! சாம்சங் பிரியர்கள் கொண்டாட்டம்

18 October 2020, 6:51 pm
Here's a clear look at upcoming Samsung Galaxy S21 with a new design, launching sooner than usual
Quick Share

கேலக்ஸி S20 சீரிஸ் மற்றும் நோட் 20 சீரிஸுடன் இந்த ஆண்டின் முதன்மை ஸ்மார்ட்போன்களை சாம்சங் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது. எனவே, அடுத்ததாக ரசிகர்கள் கேலக்ஸி S30 அல்லது கேலக்ஸி S21 முதன்மை மாடல்களை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். 

ஆனால் எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை, இன்றுவரை நாம் கேள்விப்பட்டதெல்லாம் சில வதந்திகள் மட்டுமே. ஆனால் ஒரு சிறந்த டிப்ஸ்டர் ஆன, ஆன்லீக்ஸ் (Onleaks) முதல் முறையாக கேலக்ஸி S30 போனின் தெளிவான தோற்றத்தை வெளியிட்டுள்ளது, இது இப்போது புதிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் வழக்கத்தை விட முன்னதாகவே வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Here's a clear look at upcoming Samsung Galaxy S21 with a new design, launching sooner than usual

கேலக்ஸி S30 (அல்லது கேலக்ஸி S21) ஸ்மார்ட்போனின் CAD ரெண்டர்களில் இருந்து இப்போதே பார்க்கக்கூடிய குறிப்பிடத்தக்க மாற்றம் புதிய பின்புற கேமரா வடிவமைப்பு ஆகும். மூன்று கேமராக்கள் செங்குத்தாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் முழு பளபளப்பான கண்ணாடி பகுதியும் பக்க பேனலுடன் ஒன்றிணைக்கிறது, மீதமுள்ள பின்புறம் வேறுபட்ட மேட் போன்ற தொனியைக் கொண்டுள்ளது. இது நிச்சயமாக ஒரு புதிய தோற்றம், ஆனால் ரசிகர்களுக்கு எந்தளவுக்கு இது பிடித்ததாக இருக்கும் என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். LED ஃபிளாஷ்,  கிளாஸ் பம்பிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது.

Here's a clear look at upcoming Samsung Galaxy S21 with a new design, launching sooner than usual

முன்பக்கத்தில், ஒற்றை செல்பி கேமராவிற்கு மையத்தில் ஒரு பஞ்ச் துளை கொண்ட 6.2 அங்குல தட்டையான திரை உள்ளது. கேமரா பம்பிற்கான 9.0 மிமீ உட்பட வரவிருக்கும் கைபேசி சுமார் 151.7 x 71.2 x 7.9 மிமீ அளவுகளைக் கொண்டிருக்கும்.

கைபேசி 2021 பிப்ரவரி-இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் வெளியாகும் என்று வெளியான தகவலை விட விரைவில் வரக்கூடும் என்று தகவல் தெரிவிக்கின்றது. இந்த முறை, கேலக்ஸி S30 / கேலக்ஸி S21 கைபேசி ஜனவரியில் வரலாம். இந்த தொடரில் கேலக்ஸி S21, கேலக்ஸி S21 பிளஸ் மற்றும் கேலக்ஸி S21 அல்ட்ரா ஆகியவை அடங்கும்.

Views: - 40

0

0